தோட்டத்தில் நாட்டு ரோஜா நிறைய பூக்கிறதா? வீணாக்காமல் இந்த குறிப்புகளை செய்து பாருங்கள்!

வளர்த்துவதற்கு எளிதும், நிறைய பூக்கள் பூக்கும் நாட்டு ரோஜா செடிகள் வீட்டுத்தோட்டத்தில் இருந்தால் பூக்களை வீணாக்காமல் வீட்டில் செய்ய முடியும் ரோஜா குல்கந்து, ரோஸ் ஆயில், ரோஸ் வாட்டர் என செய்து பார்க்கலாம். ரோஜா செடிகளுக்கு பூச்சிக்கொல்லிகள், செயற்கை, இயற்கை வளர்ச்சி ஊக்கிகள் செலுத்திய நாட்களை குறித்து கொண்டு அதிலிருந்து முப்பது நாட்கள் கழித்து ரோஜா இதழ்களை பயன்படுத்துங்கள்.

மிகவும் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயம் இது. பெரும்பாலான உரமும், பூச்சிக்கொல்லிகள் கடுமையான விஷம். கடைகளில் வாங்கிய ரோஜா இதழ்கள் கொண்டு செய்வதை இயன்றவரை தவிர்க்கவும். குறிப்பாக அழகுசாதனப் பொருட்கள் செய்யவோ, ரோஜா குல்கந்து செய்யவோ பூக்கடையில் வாங்கிய ரோஜாக்களை பயன்படுத்தாதீர்கள்.

ரோஸ்  ஆயில் (rose oil – essential oils) செய்முறை

  • நாட்டுரோஜா இதழ்கள் – 2 கப்
  • தண்ணீர் – 1/2 கப்
  • தேங்காய் எண்ணெய் – 3/4 கப்
  • ரோஜா இதழ்களை தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுமார் ஒரு முக்கால் கப் விழுது கிடைக்கும்.
  • அதே அளவு தேங்காய் எண்ணையை அரைத்த விழுதுடன் சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் வைத்து கிளறவும்.
  • ஒரு 10 நிமிடம் மெல்லிய தீயில் காய்ச்சும் போது, எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயம் இறக்கி இரவு முழுவதும் ஆறவிடவும்.
  • மறுநாள் காலையில் நன்கு ஆறியதும் வடித்து பத்திரப்படுத்தவும். 
  • Soap, Lotion, Cream, etc,. Cosmetic பொருட்கள்  அனைத்திலும் ரோஸ் ஆயில் நறுமணத்திற்க்கு சேர்த்துகிறார்கள். 
  • ரோஜா இதழ்களை அரைக்கும் போது சிறிது பீட்ரூட் துருவலும் சேர்க்கும் போது நல்ல ரோஸ் கலர் கிடைக்கும்.

Rose essential oil is known for its medical and cosmetic benefits. It is very good for your skin and lightens scars as well as the signs of ageing. It can help combat depression and stress. Rose essential oil can also be added to your natural hair toner to give your hair a fragrant, shining look.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.