காய்கறி பழங்களில் பூச்சிக்கொல்லிகளை நீக்கும் எளிய முறை!

சத்தான உணவு, ஆரோக்கியம் என்று மக்களின் விழிப்புணர்வால் பச்சை காய்கறிகள், பழங்கள், சாலட், ஸ்மூத்தி என்று சமைக்காத உணவினை உட்கொள்ள ஆரம்பித்து உள்ளார்கள். இது நல்ல ஆரம்பம் அதேசமயம் இதன் பின் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

பச்சை காய்கறிகள், பழங்கள், கீரைகள் அனைத்தும் எங்கோ விளைந்தது, நமக்கு உணவாகிறது. பூச்சிக்கொல்லியும், உரங்களும் பயன்படுத்தாமல் பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்வதில்லை. பூக்கும் பருவத்தில் அடித்த மருந்தின் படிவுகள் தக்காளியின் காம்புகளின் அடியில் தங்கி இருக்கும். நாம் அதனை உண்ணும் போது வேதிப்பொருட்கள் வலிய வயிற்றில் தஞ்சம் அடைகிறது.

பூச்சிக்கொல்லியின் தீமைகள்

புற்றுநோய், மலட்டுத்தன்மை, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கருச்சிதைவு, தோல் நோய்கள் சுவாசக் கோளாறுகள் என கொடும் நோய்கள் வர முக்கிய காரணங்களில் பூச்சிக்கொல்லியும் உண்டு. கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரி காடுகளுக்கு தெளித்த எண்டோசல்பான் மூலம் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்ததை கண்ட தலைமுறையினர் நாம்.

நம் வீட்டு கொல்லையில் இருந்து பறிப்பதில்லை, ஆகவே காய்கறிகளை நம்பிக்கையுடன் உண்பதற்கு இல்லை. அதற்காக காய்கறிகள், பழங்கள் இல்லாத உணவுப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு கேடு தான். கத்திமேல் நடப்பது போல தான் நமது இல்லை.

உப்பு

கடையில் வாங்கிய காய்கறிகள், பழங்களை உப்புநீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு கழுவி துடைத்து எடுத்து வைக்கவும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் கலந்த நீரில் கழுவும் போது கறிகாய்கள் மீது படிந்துள்ள பூச்சிக்கொல்லி படிவுகள் நீங்குகிறது.

வினிகர்

வெள்ளை வினிகர் அமிலம் அல்லது ஆப்பிள் சிடர் வினீகர் ஒரு பங்கு, மூன்று பங்கு தண்ணீரில் கழுவும் போது, படிந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்து கரைந்து செல்கிறது.

பேக்கிங் சோடா

ஐந்து தம்ளர் தண்ணீருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அதில் காய்கறிகளை கழுவவும்.

பத்து நிமிட மெனக்கெடல் மெடிக்கல் பில்லை குறைக்கும் என்றால் மிகையாகாது.


With the awareness of nutritious food and health, people now have started eating raw vegetables, fruits, salads and smoothies. Most farmers do not farm without the use of pesticides and fertilizers. Pesticides are highly responsible for cancer, infertility, abnormal brain development, miscarriage, skin diseases and respiratory disorders. Hence it should be washed off. Salt, turmeric powder, white vinegar or apple cider vinegar, baking soda can be used to rescue Vegetables, Fruits, Spinach(Leafy vegetables)  from pesticides. Follow this simple method to wash vegetables/fruits bought from stores or market before use.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.