காதணிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் தனிரகம்!

எத்தனை திருத்தமாக உடை உடுத்தியிருந்தாலும், காதில் கம்மல் இல்லை என்றால் அந்த உடையலங்காரமே வீண். ஏழை முதல் பணம் படைத்த பெண் வரை அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப தோடுடையவர் தான். கல் கம்மல், தொங்கட்டான், ஜிமிக்கி, காது வளையம் ….. இன்னும் விதவிதமாக கம்மல் வகைகள் உண்டு. ஆடைகளின் நிறத்திற்கேற்ப கம்மல்கள் அணியும் பெண்கள் உண்டு.

காதணிகளின் வகைகள் (Types of Ear-Rings)

காதணிகளின் டிசைன்களின் அடிப்படையில் வகைப்படுத்துவதுப் போல, காதணிகளை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அடிப்படையில் கூட வகைப்படுத்தலாம்.

பொத்தாம் பொதுவாக காதணிகள் தங்கம், வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட வை (covering studs), பிளாட்டினம், டைட்டானியம், நிக்கல் என உலோகங்கள் மூலம் செய்யப்படும் நகைகளும் பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது.

எதிலும் வித்தியாசத்தை விரும்புபவர்களுக்காகவே நினைத்து பார்க்காத பொருட்கள் கொண்டு காதணிகளை செய்கிறார்கள் அதற்கு இளம்பெண்கள் மட்டுமன்றி அனைவரிடமும் வரவேற்பு இருக்கிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

காதணிகளை உலோகங்கள் மட்டுமின்றி பிற பொருட்களை கொண்டு உதாரணமாக சிப்பிகள், விலங்குகளின் தோல், முடி, பல், தந்தம், முள்ளம்பன்றி முள், பறவைகளின் இறகுகள், பட்டு நூல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட காதணிகளைப்பற்றி நாம் ஏற்கெனவே அறிவோம். சில ஆண்டுகளாக வித்யாசமான தேடல்களுடன் படைப்பாளிகள் காதணிகள் உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று உள்ளனர். நம்மை ஆச்சரியத்துடன் காண வைக்கும் சில வகைகளை காண்போம்.

தாய்ப்பாலில் காதணிகள் (Earrings in Mother’s Milk)

பெண்ணின் தனித்துவம், பெருமை என்று எண்ணினாலே அவளுடன் ஊற்று போல் பொங்கி வழியும் தாய்மை தான். குழந்தை இருப்போர், இல்லாதோர் எல்லோருக்கும் இருக்கும் உன்னதமான உணர்வு. அதிலும் இன்றைய உலகில் தாய்மை அடைந்த பெண்கள் அதனை தங்கள் வாழ்வில் பொக்கிஷங்களாக நினைவுப்படுத்த போட்டோ, விடியோ என்பதை தாண்டி, குழந்தையின் ஆடைகள், கால், கை விரல்களின் ரேகைகள் பதிவு படுத்தியதை பார்த்திருக்கிறோம்.

குழந்தைக்காக பசியாற சுரக்கும் தாய்ப்பாலை, நகை வடிவமைப்பாளரிடம் கொடுத்தால் அதனை பதப்படுத்தி, காதணி, பென்டன்ட் (pendent) செய்து தருகிறார்கள்.

வெறும் மூன்று டேபிள் ஸ்பூன் தாய்ப்பால் அளவில் பிரிசர்வேடிவ் (preservative) சேர்த்து தயாரித்து கொடுக்கிறார்கள். குழந்தையின் உதிர்ந்த முடி, வெட்டிய நகம், விழுந்த பல் கொண்டும் ஆர்டரின் பெயரில் செய்து தருகிறார்கள்.

டெரகோட்டா காதணிகள் (Terracotta Earrings)

டெரகோட்டா என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தமே “பேக் செய்யப்பட்ட மண்” (baked earth) நமது ஊர் பூந்தொட்டி, மண்பானைகள் செய்ய உதவும் மண்களைக் கொண்டு அழகுபட மோல்டுகளில் வைத்து அல்லது கைகளிலாலோ உருவாக்குகிறார்கள்.

உருவான காதணி மற்றும் நகைகள் நீரில் கரைந்து விடாமல் இருக்கவும் அதேசமயம் உடையாமல் இருக்கவும், நெருப்பில் சுட்டு எடுக்கிறார்கள். பிறகு வர்ணம் பூசி விற்பனைக்கு வருகிறது.

காகிதத்தில் காதணிகள் (Quilling Earrings)

Acid free வகை quilling செய்ய உதவும் காகிதத்தில் க்விலிங் வடிவங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட காதணிகள், நகைகள் கூட இளம்பெண்களின் பெரும் ஆதரவுடன் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

மரத்துருவல்களில் காதணிகள் (Wooden Earrings)

பழங்குடியின மக்களின் நகைகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலம் அடைந்து வரும் காதணிகள். மரத்துருவல்கள், மரப்பட்டைகளைக் கொண்டு விதவிதமாக கற்பனையும் கைக்கொடுக்க படைப்பாளிகள் படைத்து தள்ளுகிறார்கள்.

இயன்ற பொழுதெல்லாம் வகைக்கு ஒன்றாக வாங்கி அழகுப்படுத்திக் கொள்ள தயாராகி விட்டீர்களா? பெண்களே!


Types of earrings are available online and in shops as well. As a fashion criteria, earrings play a vital role in your appearance. Available earrings are terracotta earnings, paper-made or quilling earrings, wooden earrings, etc. Furthermore, even earrings are made out of mother’s milk; that’s amazing. Pick and buy earrings of your choice from online stores or offline.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.