பருக்கள்,கரும்புள்ளி, அம்மை தழும்பு,வடு எல்லாம் போகணுமா?

முகத்தில் பருக்கள் வருவது இயல்புதான் ஆனால் அந்த பருக்கள் மறையும் போது வடுக்களை உண்டாக்கி செல்கிறது. இந்த வடுக்கள் சமயங்களில் முகத்தில் சிறு பள்ளங்களையும் உண்டாக்கிவிடுகிறது.

சந்தனம் pack:

  • சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, ஒரு cotton பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள பரு தழும்புகள் மறைவதைக் காணலாம். இல்லாவிட்டால், சந்தன கட்டையை ஒரு கல்லில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தேய்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை இரவு தூங்கும் முன் தழும்புகளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் கழுவ வேண்டும்.

வேப்பிலை massage :

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி ” என்று நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். பண்டைய காலம் முதலே நம்மை பாதுகாத்து வரும் ஒரு மூலிகை என்றால் அது வேப்பிலைதான். கசப்பு சுவையுடன் இருந்தாலும் இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. ஆயுர்வேத மருத்துவத்தில் தொடங்கி தற்கால நவீன மருத்துவம் வரையிலும் வேம்பின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. வேம்பு என்பது பல நூற்றாண்டுகளாய் நம் பரம்பரியத்துடன் கலந்துவிட்ட ஒன்று.
  • வேப்பிலை உங்கள் வீட்டில் இருந்தால், அந்த இலையை பரு வந்த இடத்தில் உள்ள தழும்பின் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி தினமும் பருக்களின் மீது வேப்பிலையை வைத்து வந்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகளால், தழும்புகள் மறையும்.

கற்றாழை pack :

  • ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • Aloe vera ஜெல்லை முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், தழும்புகள் வேகமாய் மறையும். அதோடு கற்றாழை அனைத்து சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு பொருள் என்பதால், அனைவரும் பயமின்றி இதை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.