அழகுக்கு அழகு சேர்க்க சில அற்புத டிப்ஸ்!

 • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை கடலை மாவுடன் கலந்து தடவ வேண்டும். 
 • முகத்தில் உள்ள தழும்புகள் மறைய இரவு படுக்கும் முன், புதினாசாறு உடன் தேன் கலந்து பூசவும். 
 • முகத்தில் பருக்கள் இருந்தால் பெருங்காயத்தூளை தண்ணீரில் கலந்து பரு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் பரு மறையும்.
 • நல்லெண்ணெயில் தண்ணீர் கலந்து நுரை வரும் வரை கலக்கவும். பிறகு அதனை முகம், கழுத்தில் தடவி ஊறியதும் கழுவவும். இதனால் முகப்பொலிவு பெறும்.
 • உப்பு சேர்க்காத வெண்ணெய் எடுத்து கழுத்தில் உள்ள கறுப்பு, கை முட்டிகளில் தேய்த்தால் கறுப்பு நிறம் மாறிவிடும்.
 • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கோடைக்காலத்தில் சருமத்திற்கு பாதிப்பு வராது.
 • பாலாடையுடன் கோதுமை மாவு கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
 • சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு கலந்து அக்குளில் தடவி வரவும். நாளடைவில் அக்குள் கருப்பு நீங்கும்.
 • வழக்கமான ஹென்னா பவுடர் உடன் பீட்ரூட் சாறு சேர்த்து தலைமுடிக்கு பூசவும். இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்த பலன் கிடைக்கும். பக்கவிளைவுகள் இல்லாத, சிக்கனமான அழகு குறிப்பு.
 • தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள், பொடுகு நீங்கும். முடியும் நன்கு வளரும்.
 • எலுமிச்சை, ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். அதனை தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் மேலும் முகம் பொலிவு பெறும்.
 • தயிரில் கடலைமாவு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில், கழுத்தில் தடவி ஊறியதும் தண்ணீரில் கழுவி விடவும்.

While there are numerous skin care products available in the market, you can easily find some age-old remedies right in your kitchen. Vegetables like tomato makes our skin glow. Home made remedies will make adding beauty to your face by natural.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.