கூந்தலுக்கும், முக பொலிவிற்கும் அழகு சேர்க்கும் ஆவாரம்பூ

பெண்களுக்கான அழகிற்கு அழகு சேர்ப்பதில், ஆவாரம்பூ பெரும் பங்கு வகிக்கின்றது. முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை நீக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவுகிறது. அதுமட்டுமின்றி, முடி கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ மிக சிறப்பாக உதவுகிறது.

  • ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்.
  • பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ ஆகிய மூன்றையும் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.
  • முடி கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ  மிகச்சிறந்த பணிபுரிகிறது. செம்பருத்தி, தேங்காய்ப் பால் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று முறை தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும்.
Avaarampoo Benefits in Tamil
  • வடிகட்டிய ஆவாரம் பூவின் தண்ணீரை வைத்து உங்கள் கூந்தலை அலசலாம். முகத்தையும் கழுவலாம், இதை தொடர்ந்து செய்தால் முடி சுத்தமாவதுமட்டுமில்லாமல், முகமும் பளிச்சென்று இருக்கும். உடலின் நிறம் அதிகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • ஆவாரம் பூவின் சாற்றை சுண்டக் காய்ச்சி, அதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தினமும் முடிக்கு தடவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி நன்கு வளருவதுடன் முடி கொட்டுவதும் நின்று விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.