வளையல் வாங்க போகிறீர்களா?

கைநிறைய வளையல்கள் அணிந்த வளைகரம் உலகின் ரசிக்கத்தக்கவை வரிசையில் முக்கியத்துவம் பெற்றது. ரப்பர் வளையலோ, வைரவளையலோ ஏதோவொன்று பெண்கள் கைகளை அலங்கரிக்கும் அழகே தனி.

இந்திய கலாச்சாரத்தில் வளையல்

இன்று நேற்றல்ல காளிபங்கனில் நடந்த தொல்லியல் ஆய்விலே வளையல்களை கண்டறிந்துள்ளனர். பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரும் என்று வசம்பு துண்டுகளை நூலில் கோர்த்து கைகளில் போடும் போது ஆரம்பிக்கும் வளையல் பயணம், அவளது வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது.

எத்தனை செல்வ செழிப்பு என்றாலும் மங்களகரம் என்றால் கண்ணாடி வளையல் தான். கல்யாண வளையல், வளைகாப்பு என்று வளையல் பயணம் பெண்ணோடு தொடர்கிறது. நவீன ஆடைகள் அணிந்தாலும் பிரேஸ்லெட் வடிவிலாவது பெண் கரம் சேர்கிறது.

வளையலின் வகைகள்

வளையலின் அழகும் அதன் வகையும் உணர்த்துவது அந்தப் பெண்ணின் ரசனையையும், கலைத்திறனையும் தான். இடம், பொருள் (துட்டு தான்), உடையைப் பொறுத்து வளையல் அணிவது தான் அழகு சேர்க்கும்.

அளவு விரிவாக்கம் செய்யும் வளையல் (expandable bangle), உலோக வளையல், ஸ்பிரிங் வளையல் என வளையலின் கட்டமைப்பை கொண்டு வகைப்படுத்துவது ஒரு வகை.

தங்கவளையல், வெள்ளி, வைர வளையல்கள், கண்ணாடி வளையல், முத்து வளையல், சங்கு வளையல், பட்டு நூல் வளையல், பிளாஸ்டிக் வளையல்கள் என கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற வளையல்கள் என்றால் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் வளையல்கள் தான்.

வளையல்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

  • தங்க வளையல்கள் உங்கள் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது. தினசரி அணிவதற்கு எளிமையான, அதிக வேலைப்பாடு இல்லாத தங்க வளையல்கள் தான் பொருத்தமானவை.
  • *திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வாங்கும் போது வேலைப்பாடுகள் உள்ளவை, கல்வகைகள் , “கடா”, போன்ற பெரிய வளையல்கள் பொருத்தம்.
  • வெள்ளி வளையல்களும் தினசரி உபயோகத்திற்கு ஏற்றவை
  • வளையல்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் புடவையில் மாட்டாதவாறு வாங்க வேண்டும்.

வளையல் அணிபவர்கள் பள்ளி, அலுவலகம் போன்ற பொது இடங்களுக்கு சத்தமிடும் கண்ணாடி வளையல்களைத் தவிர்க்கலாம். வளையல்கள் வாங்கினால் மட்டும் போதாது அதனை மெருகு குறையாமல் பத்திரமாக பாதுகாப்பது மிக அவசியம்.


Bangles(Valaiyal) are traditional jewellery in Indian Culture to adorn women. It adds extra beauty to hands. Bangles are circular in shape that can be made of either precious metals like silver, gold, platinum, diamond or non-precious materials such as wood, glass, plastic, terracotta which is a fired clay, stones, shells, copper, etc. Bracelets are not bangles but similar to it, that suits modern dresses. There are variety of bangles for each occasion and based on taste of women/girl such as expandable bangle, spring bangle, metal bangle, glass bangle, silk thread bangle, etc. Pay attention before selecting and buying bangles. Bangle travels from childhood to the end of women including bridal bangles and baby shower. Glass bangle is believed to be auspicious and that can be avoided for school and office. It is Rajasthan and Hyderabad bangles that received unanimous support from women.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.