இளநரை நீங்கவும், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கூந்தல் தைலம் வீட்டிலே தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்!

இன்றைய பரப்பான சூழல் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல் கூந்தலையும் பாதிக்கிறது. பரம்பரை, ஊட்டச்சத்து இன்மை, கவலை, போதிய பராமரிப்பு இல்லாததாலும் இளநரை, முடி உதிர்வது என்பது இளம் வயதிலேயே சகஜமாகி விட்டது.

சந்தையில் கிடைக்கும் அழகுசாதனப் பொருட்களை ஆய்வுச் செய்தால் கூந்தல் பராமரிப்பு சாதனங்கள் தான் அதிகமாக இருக்கும். விலை உயர்ந்த அதேசமயம் கெமிக்கல்கள் நிறைந்த தைலங்களை பயன்படுத்துவது கூந்தலையும், பர்ஸையும் பலவீனப் படுத்தும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை பெற என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

கூந்தல் பராமரிப்பு

மாதம் ஒருமுறை ஒரு அரைமணி நேரம் நமக்காக ஒதுக்கி மூலிகை எண்ணெய்களை செய்ய வேண்டும். தினசரி ஒரு பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை கூந்தல் பராமரிப்புக்கு ஒதுக்க வேண்டும். ஏதேனும் ஒரு எண்ணெய்/ மூலிகை எண்ணெய் லேசாக சூடு செய்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும். பிறகு சிகைக்காய்/ அரப்பு/ கடலைமாவு போன்ற இயற்கை பொருட்கள் மூலம் தலைமுடியை அலசி நன்கு ஈரம் போக காய விடவும். தலைமுடி சிக்கில்லாமல் சீவி எடுக்க வேண்டும். கிளிப்புகள், ரப்பர் பேண்ட் போட்டு கூந்தலை காயப்படுத்தாமல் வீட்டில் இருக்கும் போதாவது இயல்பாக விடவும்.

கருஞ்சீரக எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்

  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்

செய்யும் முறைகள்

  • ஒரு மிக்ஸியில் வெந்தயம், கருஞ்சீரகம், தனி தனியாக பொடி செய்து ஒரு பாத்திரத்தில் இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கலக்கவும். 

Double boiling method

பிறகு, ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் தருவாயில் இந்த எண்ணெய் கலவையுடனான பாத்திரத்தை அதில் மிதக்கும் அளவில் வைக்கவும். எண்ணெயில் தண்ணீர் கலக்காதவாறு சூடு செய்யவும்.

மேற்கண்ட முறை கடினமாக இருந்தால் மெல்லிய தீயில் வைத்து எண்ணெய் கலவையை சூடு செய்து ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்த வேண்டும்.

பயன்கள்

  • இதை தினமும் அல்லது வாரம் நான்கு நாட்களுக்கு இந்த எண்ணெயை மயிர்க்கால்களில் தடவி அப்படியே  மசாஜ் லேசாக செய்து கொள்ளவும், சிறிது நேரத்தில் சீயக்காய் அல்லது ஆயிர்வேத ஷாம்பு போட்டுக் குளிக்கவும்.
  • முடி கருமை நிறத்தில் இருக்க, கொட்டாமல் இருக்கவும் அடர்த்தியாக வளர இதை முயற்சி செய்து பார்க்கலாம். 

Amaranth is an effective natural grey hair treatment as it contains an enzyme that improves the level of melanin and restores the natural black colour. Dried amla can also be used to fight premature greying. Cut them into pieces and dry them in the sun. Once dry, grind into powder then mix with coconut oil. With the right diagnosis and treatments, graying can be reversed, and white hair can turn black. But if the problem is genetic or age-related, it is unlikely to reverse the process. It is possible, however, to slow it down with a balanced diet and a good hair care regime. Hormonal changes caused by athyroid problem such as hyperthyroidism or hypothyroidism may also be responsible for premature white hair. The health of your thyroid can also influence the color of your hair. An overactive or underactive thyroid can cause your body to produce less melanin.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.