பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் முட்டை ஓடு!

முட்டை புரதச்சத்து நிறைந்தது, உடலுக்கு வலிமை தரும் என்பது நாம் அறிந்ததே! முட்டையை சமையலுக்கு பயன்படுத்தும் போது, முட்டை ஓடுகளை குப்பையில் போட்டு பழக்கப்பட்ட நமக்கு, முட்டை ஓடுகளை கொண்டு பெண்களின் அழகுக்கு அழகு கூட்ட இயலும் என்பது புதிய தகவல்.

முட்டை ஓடுகளை சுத்தப்படுத்துதல்

முட்டை ஓடுகளின் உள்ளே இருக்கும் மெல்லிய உறையை எடுத்து விடவும். பிறகு அதனை தண்ணீரில் நன்கு கழுவவும். முட்டை ஓடுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, கைகளால் சிறுதுண்டுகளாக உடைக்கவும். மைக்ரோ வேவ் அவனில் வைத்து பத்து நிமிடம் சூடு செய்யவும் அல்லது ஒரு நாள் முழுவதும் நல்ல வெயிலில் காய வைத்து எடுக்கவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். கிருமிகள் நீக்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொண்டு தான் பயன்படுத்த வேண்டும்.

முட்டை ஓடு கலவை(Egg shell Face Packs)

முட்டை ஓடு பவுடர் எடுத்துக் கொண்டு அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி காயவிடவும். கை, கால்முட்டியில் உள்ள கறுப்பு நீங்கவும் தடவலாம். பத்து நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். முகச்சுருக்கங்கள் நீங்க எளிய முறை இது. முகத்தில் உள்ள சருமத்திற்கு தேவையான ஊட்டத்தையும் அளிக்கிறது.

  • முட்டை ஓடு பவுடரை தேனில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவவும். சருமம் பளிச்சென்று மிளிரும்.
  • ஆப்பிள் சிடர் வினீகர் ஒரு பங்கு எடுத்து கொண்டு அதில் முட்டை ஓடு பவுடரை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும். முட்டை ஓடு பவுடரின் சத்துக்கள் கரைந்து இருக்கும். இதில் பஞ்சினை முக்கிய எடுத்து முகத்தில் தடவவும்.
  • முட்டை ஓடு பவுடரை தயிருடன் கலந்து, மயிர்க்கால்களில் படுமாறு தடவவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். தலைமுடி பட்டுப் போல் மாறும்.

Egg shells have fabulous effects on skin and hair that adds extra beauty to the beautiful women. Collect and disrupt egg shells with a blender or simply using hands. Whisk the crushed egg shell powder with an egg white. Use it as healthful, skin-tightening facial pack or mask. It helps get to rid of face wrinkles. Mix the powder with yogurt and apply on hair to get silky hair.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.