இரவில் முகத்தை கழுவினால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்!!!

மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

முகத்தை தண்ணீரில் அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பின் ஒரு அங்கமாகும். அது அசுத்தங்கள், அழுக்குகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். நிறைய பேர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவார்கள். அதன்பிறகு எப்போதாவதுதான் கழுவுவார்கள். பல்வேறு சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு முகத்தை அவ்வப்போது கழுவுவது அவசியமானது. மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்கள்:

வீட்டை விட்டு வெளியே சென்று வரும்போது சருமத்தில் அழுக்குகள், மாசுக்கள் படிவது தவிர்க்கமுடியாதது. அது சருமத்தை எதிர்மறையாக பாதிக்கும். முகத்தை கழுவும்போது அழுக்குகள் நீங்கும். சருமத்தில் இருக்கும் மாசுக்களின் வீரியம் குறைந்துபோகும்.

முகத்தில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடும். அதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருடைய முகத்தில் கருப்பு நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ ஆங்காங்கே புள்ளி கள் தென்படும். அவை சரும துளைகள் அடைபடுவதால் ஏற்படுபவை. முகத்தை கழுவும்போது சரும துளைகள் சுவாசிக்கவும் வழிபிறக்கும்.

முகப்பரு ஏற்படுவதற்கு மோசமான சரும பராமரிப்பும் ஒரு காரணமாகும். சரும துளைகள் அடைப்பு, அழுக்குகள், தூசுக்கள் படிவது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இதர காரணங்களாகும். சருமத்தை தூய்மையாக பராமரிக்கும்போது முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது.

இரவில் தூங்க செல்லும் முன்பு சருமத்தை கழுவும்போது அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். குறிப்பாக மேக்கப்பை நீக்கி விடுவது அவசியமானது. இரவில் முகம் கழுவுவது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கும் உதவும். புதிய செல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கும் வழிவகை ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.