மேக்கப்க்கு உதவும் பிரஷ்களை சுத்தம் செய்ய 2நிமிடம் போதும்!

மேக்கப் போடுவதற்கு காட்டும் ஆர்வத்தை மேக்கப் பாக்ஸில் உள்ள பிரஷ்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மேக்கப் சாதனங்களில் உள்ள கலர்கள் மட்டும் அல்ல பாக்டிரியாக்கள் போன்ற கிருமிகளின் புகலிடம் ஆகிவிடும். ஆகவே சுத்தமாக பராமரிப்பதால் ஒவ்வாமை, சரும நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

பிரஷ்களை சுத்தம் செய்தல்

பிரஷ்களை சுத்தமாக வைத்து இருந்தால் உங்கள் நேரமும் மிச்சப்படும்.

 • பவுண்டேஷன் மற்றும் பவுடர் பிரஷ்கள் அதிகமாக பயன்படுத்துவதால் அடிக்கடி கழுவவேண்டும். வாரத்தில் ஒரு முறை கட்டாயம் பவுண்டேஷன் மற்றும் பவுடர் பிரஷ்களை கழுவ வேண்டும்.
 • கண்களுக்கு பயன்படுத்தும் பிரஷ்களை வாரத்திற்கு இருமுறை சுத்தப்படுத்த வேண்டும்.
 • Concealer பிரஷ்களையும் வாரத்திற்கு இருமுறை சுத்தப்படுத்த வேண்டும்.
 • மற்றவற்றை மாதம் ஒரு முறை கழுவவேண்டும்.

நீரில் பிரஷ்களை கழுவுதல்

 • பிரஷ்களின் நுனியில் உள்ள சிறு சிறு முடிச்சுகளை (bristles) நன்கு நீரில் அலசவும். பிரஷின் மெட்டல் பகுதி நீரில் நனையாமல் கழுவ வேண்டும். மெட்டல் பகுதியில் நீர் பட்டால் நாளடைவில் துரு பிடித்து பிரஷ்கள் சேதமாகும்.
 • கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மேக்கப் பொருட்கள் படிந்த பிரஷ்களை, அதாவது நுனிப்பகுகிகளை மட்டும் அலசவும்.
 • ஷாம்பு கொண்டு அலசுதல்

ஏதேனும் ஒரு வகை பேபி ஷாம்புவை கிண்ணத்தில் உள்ள நீரில் கலந்து பிரஷ்களை அலசவும். ஆயில் மேக்கப் பிரஷ்களை இப்படி சுத்தம் செய்யலாம்.

பிரஷ்களை உலரவைத்தல்

கழுவிய பிரஷ்களை சுத்தமான காட்டன் துணியில் ஈரம் போக துடைத்து எடுக்கவும். பிறகு கைகளால் பிரஷ்ஷின் நுனி முடிச்சுகளை தனித்தனியாக எடுத்துவிடவும்.பிறகு நன்கு உலர விடவும்.

செய்யக்கூடாதவை

 • சுடுதண்ணீரில் கழுவக்கூடாது.
 • மெட்டல் கைப்பிடிகளை நீரில் கழுவக்கூடாது
 • ஹேர் டிரையர் கொண்டு உலரச்செய்யாதீர்கள்
 • பிரஷ்களின் நுனி முடிச்சுகளை மேல்நோக்கியே வைக்க வேண்டும்.

Clean up your Makeup Brushes using lukewarm water with few drops of shampoo. It is better to choose baby shampoo. Swirl the brush in your palm to create lather and rinse the tip of brush in running tap water. It is recommended to wash your brushes at least once a week to keep bacteria away. As the concealer and foundation brushes are used directly on facial skin, it is better to clean twice in a week. Wash the brushes that are used around the eyes such as eyelash curler, twice in a week. Use dry cotton cloth to dry off the bristles, squeeze out excess water and reshape the head as needed.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.