வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பொடுகு நீக்க இதை செய்யுங்க!

பொடுகு என்னும் பூஞ்சைகளால் தலைமுடி உதிர்வது, வறண்டு போதல் நாளடைவில் கூந்தல் பொலிவிழந்து விடும். இதனைத் தவிர்க்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சோம்பல் படாமல் தினசரி ஒரு கலவையை கூந்தலுக்கு தடவி வந்தால், எந்தவொரு பக்கவிளைவுகள் இல்லாது பொடுகு தொல்லை நீங்குவதோடு கூந்தல் வளர்ச்சியும் மேம்படும்.

 • கடலைமாவு உடன் தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும். 
 • சோற்றுக்கற்றாழைச் சாற்றைத் தலையில் முடியின் வேர்க்கால்களில்  நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 • வேப்பிலைக் கொழுந்து, துளசி  ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.சைனஸ் தொல்லை இருப்பவர்கள் இதனை தவிர்க்கவும்.
 • துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்ல பலன் கிடைக்கும்.
 • மருதாணி இலையை நைசாக அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.
 • நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். 
 • தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து அதனை தலையில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
 • அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.
 • பொடுதலை தைலம் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 • சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து  வைத்து மைபோல அரைத்து, அதன் சாறெடுத்து தலைக்கு தேய்த்துக் குளித்து  வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.
 • தூசி, அழுக்கு இல்லாத முறையான பராமரிப்பு உள்ள கூந்தல் அழகு மட்டும் அல்ல தன்னம்பிக்கையும் தரும்.

Natural home remedies for dandruff will help you to get rid of dandruff. Treat your dry scalp with green tea. Control dandruff with neem leaves. While there are plenty of over-the-counter products designed to treat dandruff, natural remedies can be just effective. Lemon juice can help control dandruff.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.