முக பொலிவிற்காகவும் கூந்தல் வளர்ச்சிக்கு என இயற்கையாக பயன்படுத்திய பொருட்கள். சருமத்தின் அழகினை பாதுகாத்தது.
இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம்.
இயற்கை தந்த மூலிகைகளைக் கொண்டு நமக்கு தேவையான குளியல் பொடியை வீட்டிலே தயாரிக்கலாம்.இயற்கை வழிமுறைகளை நோக்கி சிறு அடி எடுத்தால் போதும் , அதன் அளப்பரிய நன்மைகள் நம்மை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இயற்கை பொருட்களை பயன்படுத்த வைக்கும்.
மூலிகை குளியல் பொடிக்கு தேவையான பொருட்கள்
- சந்தனம்
- அகில்
- அதிமதுரம்
- மரிக்கொழுந்து
- துளசி
- கஸ்தூரி மஞ்சள்
- ரோஜா இதழ்கள்
- வெட்டி வேர்
- ஜாதிக்காய்
- திரவியப்பட்டை
- மகிழம் பூ
- ஆவரம் பூ
- வேம்பு
- செம்பருத்தி பூ
- மாகாளிக்கிழங்கு
- பூந்திக்கொட்டை
- பூலான் கிழங்கு
- கோரைக்கிழங்கு
- கார்போகரசி
- விளாமிச்சை
- பச்சை பயறு
- ஆரஞ்சு பழத்தோல்
- கடலை பருப்பு
மேற்கண்ட மூலிகை சரக்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.பச்சைப்பயிறு , கடலைப்பருப்பு தவிர மீதி அனைத்தும் சம அளவில் வாங்கி வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடி ஆக்கி சலித்து ஈரமில்லாத டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.பச்சைப்பயிறு , கடலைப்பருப்பு மட்டும் நூறு கிராம் அளவு எடுத்து கொள்ளவும்..
- இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
- இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
- தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும்.
- வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும் தரும்.
- வெயிலினால் உன்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.
இந்த இயற்கை குளியல் பொடி பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. நம் சந்ததியினராவது செயற்கையை தவிர்த்து இயற்கையானதை பயன்படுத்தி நன்மை பெறட்டும்.
இயற்கை சுகந்த பொடி வாசனை மேனியெங்கும் பரவி புத்துணர்வு தரட்டும்..
How to prepare herbal bath powder for skin whitening & benefits of bath powder for fairness. Use this “kuliyal powder” recipe at home to prepare baby bath powder. Homemade herbal baby skin whitening bath powder have excellent benefits on babies and for adults too.