கொய்யா இலைகளைப் பயன்படுத்தி முடி உதிர்வை தடுப்பது எப்படி !!!!

தலைமுடி உதிர்வு பிரச்சனை பெண்களும் ஆண்களும் அதிகமாக சந்தித்துவருகிறார்கள். இதை தடுப்பதற்கு பல வழிகளையும் பின்பற்றி வருகிறார்கள்.

இதற்கான புதிய தீர்வொன்று இருக்கிறது .அதுதான் கொய்யா இலை, பழம் போன்று இதன் இலைகளும் சரும அழகிலும், கூந்தல் வளர்ச்சியிலும் மிகப்பெரும் நன்மைகளை அளிக்கிறது.

கொய்யா இலைகளை சரியாக பயன்படுத்தினால் பிரச்சனைக்கான தீர்வை சரியாக போக்க முடியும். கொய்யா இலையை அரைத்து சாறாக்கி பயன்படுத்தலாம், நீரில் கலந்து கொதிக்கவைத்து கூந்தலில் தடவி பயன்படுத்தலாம், கொய்யா இலை எண்ணெயாக காய்ச்சியும் பயன்படுத்தலாம். முடி உதிர்வு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கொய்யா இலையை பயன்படுத்தும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்.

​கொய்யா இலை

  • கொய்யா இலை வைத்தியம் செய்வதற்கு முன்பு கொய்யா இலையின் மகத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம். கொய்யா இலையில் vitamin-b, நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்க உதவும். இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தலைமுடி வேர்களை பலப்படுத்த உதவுகிறது.
  • Antioxidant நிறைந்திருப்பதால் இவை ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி முடி சேதத்தை தடுக்கின்றன. இவை தலையின் ஸ்கால்ப் பகுதியில் கொலாஜன் சுரப்பை மேம்படுத்துவதால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி சாத்தியமாகிறது.​கொய்யா இலை சாறு -அரிப்பு, பொடுகு, வறட்சி போன்றவற்றை போக்கும்.இவை மூன்றுமே தலைமுடி உதிர்வுக்கு மிகப்பெரிய காரணம். இவை கூந்தலின் வளர்ச்சியையும் தடுத்து முடி உதிர்வையும் அதிகரிக்க செய்கிறது.

செயல்முறை:

  • கொய்யா இலைகள் கூந்தலின் அளவுக்கேற்ப 15 அல்லது 20 இலைகள் எடுத்து சுத்தமாக கழுவி அவை மூழ்கும் அளவு நீர் விட்டு வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அந்த இலைகளை அரைக்கவும். இலை ஊறவைத்த நீரையே பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கொய்யா இலையை அரைத்து அதில் 2 tsp அளவு சுத்தமான தேன் கலந்து குழைக்கவும். இதை சுத்தமான கூந்தலில் வேர் முதல் நுனிவரை massage செய்யவும், . பிறகு 30 – 45 நிமிடங்கள் வரை கூந்தலை வெதுவெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.
  • 3 மணி நேரம் வரை கூந்தலை அப்படியே வைத்திருந்த பிறகு வெறும் தண்ணீரில் (வெதுவெதுப்பான நீரில்) கூந்தலை அலசி எடுக்க வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துவரலாம்.

இதன்முலம் நாம் முடி உதிர்வில் இருந்து விடை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.