பெண்களுக்கு பேரழகு தரும் போச்சம்பள்ளி புடவைகள்

இந்திய பெண்களின் அழகை மெருகேற்றுவது அவர்கள் உடுத்தும் புடவை என்றால் மிகையாகாது. புடவைகளின் வகைகள் எண்ணிக்கையில் அடங்காது.  புடவை கட்டும் விதமும் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது.கலாச்சார பெருமைமிகுந்த புடவைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு. அதில் ஒன்றே, பெண்கள் விரும்பும் போச்சம்பள்ளி புடவைகள்.

போச்சம்பள்ளி புடவைகள் வரலாறு (Pochampally Sarees)

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புவனகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தான் ஜியோமெட்ரிக் (Geometric)  வடிவ டிசைன்களான இக்கத் வகை புதுமையான டிசைன்களால் பெயர் பெற்ற புடவைக்கு பெயர் போன நகரம். நம்ம ஊர் காஞ்சிபுரம் போல புடவை நெய்தலை தொழிலாக கொண்ட நகரம்.

தெலுங்கானாவிற்க்கு அருகில் உள்ள குஜராத் , ஒரிசாவில் கூட இக்கத் வகை புடவைகள் நெய்தாலும் , தொன்றுதொட்டு தெலுங்கானாவில் தான் இக்கத் புடவைகள் நெய்து உள்ளனர்.

சென்னைக்கும் விஜயவாடாவுக்கும் இடையே உள்ள சிராலா , ஜென்ரிபேடா வில் தான் உற்பத்தியானது. காலப்போக்கில் அங்கிருந்து இடம்மாறி போச்சம்பள்ளியே முக்கிய ஸ்தலமாகி விட்டது.இன்று ஐயாயிரத்திற்க்கு மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளது.

பத்திக் முறையில் டிசைன்கள்

இக்கத் டிசைன்கள் ஒரு பிரத்யேக டையிங் முறையில் தான் வடிவமைப்பு செய்கிறார்கள். முடிச்சு போட்டு டை (tie -die)பத்திக் போன்று தேவைப்படும் டிசைனில் மெழுகு கொண்டு மறைத்து மற்ற பாகங்களை சாயமேற்றுகிறார்கள்.சாயம் பிடித்த பின் சுடுநீரில் போட்டு மெழுகை பிரிக்கும் போது அழகிய ஜியோமெட்ரிக் புடவைகள் தயார்.

பட்டு , காட்டன் மற்றும் சில்க் காட்டன் வகை துணிகளில் இக்கத் டிசைன்கள் உற்பத்தி செய்கிறார்கள்.ஒரிசாவிலும் இக்கத் டிசைன்கள் ரக புடவைகள் உற்பத்தி செய்கிறார்கள்.

இவற்றை விட போச்சம்பள்ளி இக்கத் புடவைகள் மென்மையாகவும் , எடை குறைவாகவும் இருக்கும். ஒரு இக்கத் புடவைகள் செய்வதற்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பத்து நாட்கள் உழைக்க வேண்டும்.

போச்சம்பள்ளி இக்கத் புடவைகள் கடந்த 2005 ல் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. யுனஸ்கோவினால்” iconic saree weaving clusters of India” கௌரவிக்கப்பட்டுள்ளது.

அழகிய நிறங்களில் கோடு , கட்டம் அமைப்பு அடிப்படையில் கண்களுக்கு விருந்தான இந்த புடவைகள் ஏர் – இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களால் தான் பிரபலமானது.


Pochampally sarees are the unique latest saree designs. It is originated from the place called Pochampally, Telugana state. This pochampally saree comes with unique geometric pattern designs in stunning colors. It is a latest saree designs that suits well for all ages of woman. This design comes in cotton, silk sarees collections. Pochampally silk sarees gives more traditional as well as gorgeous look to women.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.