சிகைக்காய் பொடி தலைமுடியை வறட்சி ஆக்குமா?

ஷாம்புவுக்கு மாற்றாக சிகைக்காய் பொடி போட்டு தலைமுடியை அலச ஆரம்பித்து உள்ளார்கள். அந்தக்காலத்தில் சிகைக்காய் பயன்படுத்தி வந்ததால் நீண்ட முடியோடு வலம் வந்தார்கள். இன்றும் நிறைய கூந்தலுக்கான அழகுசாதனப் பொருட்களில் சிகைக்காய் சேர்க்கப்படுகிறது. 

சிகைக்காய்  கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது

சிகைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்  ஸ்கால்ப் – scalp ல் உள்ள கொலாஜன் எனும் புரதத்தை தூண்டுகிறது. மேலும் இதில் உள்ள விட்டமின்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. சிகைக்காயில் பூஞ்சை கொல்லி தன்மை உள்ளதால் பொடுகை விரட்டுகிறது. ஆகவே கூந்தல் கறுத்து செழுமையாக வளரும்.

சிகைக்காயின் பக்க விளைவுகள்

  • சிகைக்காய் பயன்படுத்தும் போது கண்களில் பட்டால் கடும் வலி, எரிச்சல் ஏற்படும்.
  • ஆஸ்துமா, ஈஸினோஃப்லீயா போன்ற நோய்கள் சிகைக்காயால் வரும்.
  • தொடர்ந்து சிகைக்காய் பயன்படுத்தும் போது கூந்தல் வறட்சி ஏற்படும்.

சிகைக்காய் பொடி அரைக்கும் போது சேர்க்க வேண்டியவை

சிகைக்காய் வாங்கி அரைப்பதாக இருந்தால், கண்டிப்பாக கூந்தலுக்கு நன்மை அளிக்கிறது. நல்ல தரமான சிகைக்காயை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். 

  • சிகைக்காய் – 1 கிலோ
  • நெல்லிக்காய் – கால் கிலோ
  • உலர் செம்பருத்தி – 100 கிராம்
  • வெந்தயம் – கைப்பிடி அளவு
  • வேப்பிலை –  இரண்டு கப்

செய்முறை

கொடுத்திருக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி வெயிலில் காய வைத்து சிகைக்காய் உடன் அரைக்ககவும்.

பயன்படுத்தும் முறை

  • சோறு வடித்த கஞ்சியில் கலந்து பேஸ்ட் ஆக்கி தலையில் தடவி குளிக்கவும்.
  • தேங்காய் எண்ணெயில் கலந்து பேஸ்ட் ஆக்கி தலையில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிக்கும் போது கூந்தல் பட்டுப் போல இருக்கும்.

One of the most commonly-used natural ingredients, this plant has been used as a hair cleanser in most parts of India since time immemorial. Shikakai contains vitamin C and D, along with other properties that make it ideal for hair care. Acacia concinna extracts are used in hair powders and natural shampoos. The pods, leaves and bark of this tree are ground and used as extract or dry powder. The bark of the tree contains high levels of saponins.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.