இயற்கையான பொருட்கள் கொண்டு வெள்ளை முடிக்கு கறுப்பு சாயம் தயாரிக்கலாம்!!

கெமிக்கல்கள் நிறைந்த ஹேர்டை நிறைய பக்கவிளைவுகள் தரும். இந்த கெமிக்கல்கள் முடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்கிறது. நாளடைவில் முடி உதிர்வதோடு, கறுப்பு திட்டுக்கள் முகம், கழுத்தில் பக்க விளைவாக தோன்றும். பக்கவிளைவுகள் இல்லாத, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஹேர்டை செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • கரிய போளம் –  விரல் அளவு
 • கிராம்பு – 2
 • நெல்லி பொடி – 3 ஸ்பூன்
 • கரிசாலைபொடி – 2 ஸ்பூன்
 • கடுக்காய் பொடி – 2 ஸ்பூன்
 • அவுரி பொடி – 4 ஸ்பூன்

செய்முறை

 • இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து 3 / 4 டம்ளர் தண்ணிர் ஊற்றி, கரிய போளம், கிராம்பு, நெல்லி பொடி போட்டு அனைத்தும் கலந்தும் இறக்கி இரவு முழுவதும் அப்படியே விடவும்.
 • மறுநாள் காலையில் மேற் கண்ட கலவையுடன்  கரிசாலை பொடி, கடுக்காய் பொடி, அவுரி பொடி மூன்றையும் சேர்த்து சுடு நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
 • மேற்கண்ட கலவையை தலையில் நன்றாகத் தடவி ஊற விடவும்.
 • தலைக்கு பேக் போட்டு 2 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசவும். 
 • ஷாம்பு எதுவும் பயன்படுத்த வேண்டாம்.
 • இந்த ஹேர்டை போடுவதற்கு முன் தலைமுடிக்கு ஹேர் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லது.
 • ஹேர் கண்டிஷனராக தலைக்கு மருதாணி, கெட்டியான டீ டிக்காஷன், எலுமிச்சை சாறு சேர்த்து தலைக்கு பேக் போட்டு வெறும் தண்ணீரில் அலசவும்.
 • இந்த கலவையின் குளிர்ச்சியால் சளி பிடிக்கும் என்பதால், குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் மாலை நேரத்தில் எந்த கலவையையும் போடாதீர்கள்.
 • சளி தொந்தரவு உள்ளவர்கள் உச்சிப்பொடி என்று ஆயூர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி தலைக்கு குளித்ததும் உச்சந்தலையில் தடவிக் கொண்டால் சளிப்பிடிக்காது.

Homemade hair dye is easier than you think. If you’re looking to ditch chemical salon solutions to do it yourself naturally, Many herbs and natural substances to make natural dyes. One of the best known is henna, but there are many others. The most commonly known benefits of henna for hair is that it is a natural hair colouring agent and conditioner. We share a few basic tips to colour hair at home using absolutely natural and herbal ingredients.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.