முல்தானி மட்டி என்பது என்ன ?
பயன்கள்
- சருமத்தை சுத்தப்படுத்தி, வெளுப்பாக்குவதால் பொலிவு கூடுகிறது.
- உலர்ந்த செல்களை நீக்கவும் , எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது.
- அதிகமாகப் போட்டுத் தேய்த்தாலோ, அதிக நேரம் வைத்து இருந்தாலோ, முக சருமத்தின் மேலே உள்ள அதிமென்மையான அடுக்கு , பாதிக்கப்படும்.
பயன்படுத்தும் முறை
- முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும்.
- பரு பிரச்னை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது.
- முக பரு உள்ளவர்கள், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ் பேக் போடலாம். மிக சிறந்த பலன் கிடைக்கும்.
- 15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானிமட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென இருக்கும்.
- வெயில்காலத்தில் முல்தானி மட்டி பயன் படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.
- புதினா, வேப்ப இலைகளின் விழுது இவற்றுடன் 2 டீஸ்பூன் முல்தானிமட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்கிறது.
- இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வரம் என்பதால் இயன்ற பொழுதெல்லாம் இயற்கையோடு வாழ்வோம். இயற்கையான பொருட்கள் பயன்படுத்தி இயற்கை அழகை பெறுவோம்.
Multani mitti is also known as Fuller’s earth. It is a natural mineral-rich clay found in our earth and it has been used as a beauty ingredient since many centuries. Nowadays, multani mitti based beauty and skin care products are coming in the market as it is a natural ingredient to preserve natural beauty of skin. It helps to increase fairness, controls oil secretion, removes pimples and pimple black marks on regular usage. Using multani mitti face pack by adding few drops of lemon juice is the best face pack for oily skin and pimples problem.