முகம், கை, கால்களில் தேவையற்ற முடியை நீக்கும் குளியல் பொடி

முகம், கை, கால்களில் உள்ள தேவையற்ற முடியை நீக்க பெண்கள் சிரமப்படுவார்கள். பெண்களுக்கு, முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்துவந்தது, எனவே இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது. முகத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளும் உதிர்ந்துவிடும். தற்போது நாம் மஞ்சள் பயன்பாட்டிலிருந்து விலகிவிட்டதால், அடிக்கடி வாக்ஸிங் செய்துகொள்கிறோம்.

வாக்ஸிங் செய்வதற்கு பதிலாக, இயற்கை முறையிலேயே உடம்பில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றிவிடலாம். இயற்கை சிகிச்சையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது.

ஆனால், வாக்ஸிங் செய்வது போல இதை உடனடியாக தேய்த்து குளித்திவிட்டு பலனை எதிர்பார்க்க முடியாது. இந்த குளியல் பொடியை, தொடர்ந்து பயன்படுத்திவர வேண்டும். குறைந்தது 6 மாதத்தில் இருந்து 1 வருடம் கூட ஆகலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கால கட்டம் எடுக்கும். சிலருக்கு 3 மாதத்திலேயே கூட ரிசல்ட் தெரியலாம். சிலருக்கு 6 மாதம் ஆகலாம். சிலருக்கு ஒரு வருடமும் ஆகலாம். ஆனால், நிச்சயம் தீர்வு கிடைக்கும். ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து இதனுடைய பலன் தெரிய ஆரம்பிக்கும். ஆனால், தீர்வு நிச்சயம் உண்டு.

தேவையற்ற முடிகளை அகற்றுவதற்காக, இரண்டு வகையான குளியல் பொடியை வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தலாம். உங்களுக்கு எது சுலபமோ, அதை அரைத்து பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

தேவையற்ற முடியை நீக்கும் பொடி – 1

தேவையான பொருட்கள்:

பச்சைப்பயறு – 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
வெட்டி வேர் – 100 கிராம்
விலாமிச்சை வேர் – 100 கிராம்
சீமை கிச்சலி கிழங்கு – 100 கிராம்
கோரை கிழங்கு – 100 கிராம்

இவை அனைத்தையும், நன்கு பொடித்து வைத்து குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். இதை தினமும் பயன்படுத்தவேண்டும் என்பதால், சிலர் தேவையான இடங்களில் பேக் போல போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதைத் தினமும் பயன்படுத்துவதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், 6 மாதத்தில் ரிசல்ட் தெரிய தொடங்கும். முடியின் வளர்ச்சி குறைந்திருக்கும். சில முடிகளும் உதிரும். கடைகளில் ரெடிமேடாக குளியல் பவுடர் விற்கும், ஆனால் அதை வாங்கி பயன்படுத்துவதை தெவிர்க்கவும். அவற்றின் தரம் சரியாக இல்லாவிடில் உங்களுக்கு பயன் அளிக்காது. நீங்களே பொருட்களை வாங்கி அரைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

தேவையற்ற முடியை நீக்கும் பொடி – 2

தேவையான பொருட்கள்:

கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் – ஒரு பங்கு
அம்மான் பச்சரிசி – பாதி பங்கு

இவை மூன்றையும் நன்கு அரைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும் தேவையான அளவு இந்த பொடியை தண்ணீரில் குழைத்து, உங்களுக்குத் தேவையான இடங்களில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவவும் அல்லது குளித்துவிடலாம். தினமும் செய்யலாம்.

ஒருசிலருக்கு, அம்மான் பச்சரிசி அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் ஒருமுறை செக் செய்துவிட்டு பின்னர் பயன்படுத்தவும்.


How to prepare natural bathing powder at home? Ingredients to prepare natural ‘kuliyal powder’ at home. This helps in naturally and permanently remove unwanted hair on your face, legs and hands.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.