இயற்கை மேக்கப் பொருள் – வீட்டிலேயே தயாரிக்கும் முறை..

ஃபேஸ் ப்ரைமரின் முதன்மை செயல்பாடு, உங்கள் முகத்தில் மேக்கப்பை மென்மையாக்க உதவுகிறது மேலும் முக தோலில் நன்றாக கலக்க உதவுகிறது. ஃபேஸ் ப்ரைமரை எப்போது உங்கள் முகத்தில் தடவ வேண்டும்? மாய்ஸ்ச்சரைசர் உபயோகப்படுத்தியதற்கு பிறகு போவுண்டேஷன் உபயோக படுத்துவதற்கு முன்னதாக  நீங்கள் ஃபேஸ் ப்ரைமரை பயன்படுத்த வேண்டும்.  இதனால் உங்கள் மேக்கப் பலமணி நேரங்கள் உங்கள் முகத்தில் தங்குவதற்கான மென்மையான தளத்தை உங்கள் முகத்தில் உருவாக்குகிறது.

ஒரு நல்ல ஃபேஸ் ப்ரைமர் தோல் தொனியை சமன் செய்கிறது அதாவது உங்கள் ஸ்கின் டோனை ஸ்மூத்தாக வைக்க உதவுகிறது. ஃபேஸ் ப்ரைமர் பயன்படுத்துவதால், முகத்தில் வீக்கம் மற்றும் தோல் சிவத்தல் குறைகிறது. முகத்தில் அதிகப்படியான எண்ணெயைக் குறைத்து அதன் மூலம் உங்கள் முகத்தில் மேக்கப் தங்கி இருக்கும் நேரத்தை நீடிக்கும். சந்தையில் பல பிராண்டட் ப்ரைமர்கள் கிடைத்தாலும், உங்கள் தோல் வகைக்கு சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சவாலானது மற்றும் இது விலை உயர்ந்தது கூட. மேலும், வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பொருட்கள் ரசாயனங்களைப் பயன்படுத்துவதால், அடிக்கடி மேக்கப் போடும்பொது, நீடித்த பயன்பாடு முக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இயற்கையான ஃபேஸ் ப்ரைமர்கள் எப்போதும் வீட்டிலேயே எளிதாக தயாரித்துக்கொள்ளலாம், மற்றும் இது கடைகளில் நீங்கள் வாங்குவதை விட மலிவானவை. ஒரு இயற்கையான ஃபேஸ் ப்ரைமர் நம் முக சருமத்தை ஹைட்ரேட் செய்து ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சுருக்கங்கள் மற்றும் முகத்தில் காணக்கூடிய நேர்த்தியான கோடுகளை நிரப்பவும் உதவுகிறது. மிக முக்கியமாக, இது உங்கள் தோலில் உள்ள துளைகளை மறைக்கும்,

சில இயற்கையான ஃபேஸ் ப்ரைமர்களை வீட்டிலேயே எப்படி உருவாக்குவது என்பதை கீழே உள்ள  வீடியோவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.