இளம் வயதினருக்கு பெரும்பாலும் முகப்பரு ஒரு சவாலாகவே இருக்கும். சிலருக்கு அது வயதின் முதுர்ச்சியால் வந்தாலும், சீக்கிரம் மறைவதில்லை. அதுமட்டுமல்லாமல், முகப்பரு வேறு சில பிரச்னைகளையும் முகத்தில் ஏற்படுத்திவிட்டு செல்லும். வேறு சிலருக்கு முகப்பரு வயதின் காரணமாக வராமல், சுற்றுப்புற சூழல்களாலும் அல்லது உணவு முறைகளாலும் வரும்.
பருவ வயதை தாண்டியும் அதிக முகப்பருக்கள் வந்துகொண்டே இருந்தால், அது வாழ்வியல் முறை சார்ந்ததாகவும் இருக்கும். அதாவது லைப்ஸ்டைல் என்று சொல்லக்கூடிய உங்களுடைய தினசரி பழக்கவழக்கங்களால் வர வாய்ப்புண்டு. இதற்க்கு, வீட்டு வைத்தியம் மேற்கொள்ளாமல் உங்களுடைய தினசரி பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு அதோடு மனதை சீராக வைத்துக்கொள்வதும் அவசியம்.
சிறந்த பேஸ்வாஷ் பயன்படுத்துவதும் உங்கள் முகத்தை பொலிவோடும், மாசு இல்லாமலும் வைத்துக்கொள்ளும்.