கண்களின் கீழ் கருவளையத்தை நீக்கும் சூப்பர் டிப்ஸ்!

முகத்திற்கே அழகென்றால் நமது பேசும் கண்கள் தான், ஆனால் முகத்தின் அழகை கெடுப்பதில் முக்கியமான ஒன்று கண்களின் கீழ் வரும் கருவளையம்.

கருவளையம் இருக்கும் போது முகத்தின் அழகே கெடும், கருவளையம் வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. கண்களுக்கு கீழ் உள்ள தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கருவளையம் ஏற்பட காரணங்கள்

 • சரிவிகித உணவு இல்லாமல் உண்பதுகூட சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் கருவளையம் ஏற்படும்.
 • கண்களுக்கு அதிக வேலை இருந்தாலும் கருவளையம் ஏற்படும்.
 • அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் அல்லது டி.வி, மொபைல், கம்பியூட்டர் தொடர்ந்து பயன்படுத்தினாலும் கருவளையம் தோன்றும்.
 • நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட கருவளையம்
  ஏற்படலாம்.
 • அனிமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு இருந்தால் கருவளையம் ஏற்படும்.

கருவளையம் நீங்க எளிய குறிப்புகள்

 • தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, தினமும் கண்களை சுற்றி பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் குறையும்.
 • விட்டமின் ஈ ஆயில் கொண்டு கண்களின் கீழ் தடவலாம்.
 • உருளைக்கிழங்கிற்க்கு இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உண்டு.
 • இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் நனைத்து எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவ வேண்டும்.
 • ரோஸ்வாட்டருடன் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், வாரம் இருமுறை செய்து வரலாம்.
 • தக்காளியை அரைத்து அதனை கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 • வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைக்கலாம். கண்களுக்கு குளிர்ச்சியும், சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
 • சோற்றுக் கற்றாழை ஜெல் தடவி வரலாம். இதில் உள்ள சத்துக்கள் கண்களை சுற்றி உள்ள சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

Dark circles(Karuvalayam) around (or) under eyes may be due to lack of sleep. Scratching or rubbing eyes excessively can also cause black circles which sometimes appear puffy. Use rose water, aloe vera gel, vitamin e oil gives best result out of home remedies.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.