முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா? இந்த தைலங்களை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!

முக அழகு, பொலிவு வேண்டும் என்பதற்காக மெனக்கிடாத பெண் பிள்ளைகளே இல்லை. எதற்கெடுத்தாலும் பார்லருக்கு செல்வதை நிறுத்தி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை பராமரிக்கலாம். விருப்பம் இருந்தால் பக்கவிளைவுகள் இல்லாத ஆயுர்வேத தைலங்களை வாங்கி மசாஜ் செய்வது நல்ல பலன் அளிக்கும். வாயில் நுழையாத பெயர்களைக் கொண்ட கெமிக்கல்கள் நிறைந்த க்ரீம்களை விட இவை மிகுந்த பலனளிக்கும். நம்பகமான ஆயுர்வேத கடைகளில் தரமான தைலமாக தேடி வாங்குதல் நலம்.

ஆயுர்வேத தைலங்கள்

மருத்துவர் ஆலோசனையின்றி வாங்கி உபயோகிக்க கூடிய தைலங்கள் என்றால் லக்ஷாதி தைலம், குங்குமாதி தைலம், ஏலாதி தைலம். இதுவும் வாங்க இயலாதவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையை இளம் சூடாக்கி மசாஜ் செய்யலாம்.

மசாஜ் செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை

சுற்றுச்சூழல் மாசு, முறையான பராமரிப்பு இல்லாத சருமம் எனில் கறுத்து பொலிவிழந்து இருக்கும். அழுக்கை நீக்காமல் எந்தவொரு சரும பராமரிப்பும் நிறைவுறாது. ஆகவே எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர்விட்டு, பஞ்சினால் முகம், காது மடல்கள், கழுத்தில் நன்றாகத் துடையுங்கள். அழுக்கு பெரும்பாலும் நெற்றி, மூக்கு இடுக்குப் பகுதிகளில் அதிகம் படிந்திருக்கும். அங்கு நன்கு துடைத்து எடுக்கவும்.

எலுமிச்சை அலர்ஜியா

எலுமிச்சை அலர்ஜி உள்ளவர்கள் குளிர்ந்த பாலை பஞ்சில் நனைத்து முகத்தில், கழுத்தில் தடவி ஊறியதும் கழுவி விட்டு மசாஜ் செய்ய ஆரம்பிக்கலாம். 

கவனிக்கவேண்டியவை

  • மசாஜ் செய்யும்போது, வட்டமாகவும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்ய வேண்டும். இதனால் சருமம் தளர்வடையாமல் இருக்கும்.
  • தைலத்தை நேரிடையாக அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்து பொறுக்கும் அளவு சூட்டில் முகத்தில் தடவி மசாஜ் செய்யும் போது முகத்தில் உள்ள சருமத்துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். மேலும் எண்ணெயில் உள்ள மூலிகையின் பொருட்கள் சருமத்தில் ஊடுருவும். 
  • மசாஜ் செய்து முகத்தை கழுவிய பிறகு ஐஸ் வாட்டரில் நனைத்த துணியால் முகத்தை தடவினால் திறந்த சருமத் துவாரங்கள் மூடிக் கொள்ளும்.

Kumkumadi Tailam is Ayurvedic herbal oil used for face massage. It is helpful to improve skintexture, complexion and also to relieve skin problems such as acne, scars etc. Kumkuma means saffron, which is the main ingredient of this medicine. It has antibacterial, antioxidant and anti-inflammatory effects, which helps to prevent and treat acne or pimples. However, it is less effective in the treatment of acne when compare to other ayurvedic formulations. Kumkumadi Tailam has a mild cleansing effect, which helps to prevent acne and pimples.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.