தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க எளிய அழகுக் குறிப்புகள் பற்றி பார்ப்போம்!

ஹார்மோன்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள்,  மருந்துகள் மற்றும் நோயாக்கான சிகிச்சைகளின் பக்கவிளைவுகள், சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணங்கள் தலைமுடி அடர்த்தியின் குறைவதற்கு. எளிமையாக எப்படி முடியினைப் பராமரிப்பது என்று பார்ப்போம்!

கூந்தல் வளர்ச்சிக்கு சரிவிகித உணவு குறிப்பாக புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவுகள் மிகவும் முக்கியம். நிறைய புத்தம் புதிதான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்ண வேண்டும். அசைவ உணவு உணபவர்கள் புரதம் நிறைந்த மீன் மற்றும் முட்டை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.முட்டையில் உள்ள பயோட்டின் முடி உதிர்வதை நிறுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்

  • தேங்காய் எண்ணெயில் உள்ள அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை   பலவீனமான தலைமுடியை அதாவது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்குகிறது.  
  • தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்

  • கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் அளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், பொடுகு தொல்லை, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம். 
  • கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து பிறகு அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.கூந்தலும் பட்டுப் போல இருக்கும்.

நெல்லிக்காய்

  • நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும். நெல்லிச்சாறை தேங்காய் எண்ணெயில் கலந்து லேசாக சூடு செய்து தலைமுடியில் தடவலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கை தோலில் உள்ள மண் போக கழுவி அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் வலுவிழந்த தலைமுடியை சரிசெய்வதோடு, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்.

முட்டை

அந்தக் காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளைப் போக்க முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் முடியின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் அதிகம் உள்ளது. அடர்த்தியான தலைமுடிக்கு  நல்லெண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி ஊற வைத்து அலசுங்கள்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை இரவில் படுக்கும் போது பால் மற்றும் தயிர் கலந்த கலவையில் ஊற வைத்து, மறுநாள் தயிரில் ஊறிய கறிவேப்பிலையை மென்று தின்றால் மிகவும் நல்லது.


To increase hair volume and stimulate growth, it is essential to maintain an appropriate diet, manage stress and take proper care of your hair and scalp. There are also effective treatments you can use to improve hair density and stimulate the growth of new hair. Potato juice to increase hair thickness. Potato juice is having vitamin A, B and c that are most essential vitamins for healthy hair. Extract the potato juice and apply on the scalp, after 15 minutes, wash it with mild shampoo. Do it twice in a week for better hair volume. Repeat once weekly or twice per week. Alternatively, mix one yolk with a tablespoon of essential or carrier oil(s) and a couple of tablespoons of water. Massage in the scalp, rinse and wash. Again, repeat weekly to grow hair faster, thicker and longer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.