- கோடைக்காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்
- சரும பிரச்சனைகள் ஏற்படும்
- பச்சை பால், சரும பிரச்சனைகளை குணம்படுத்தும்

கோடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன. இதனை சன்- டான் என குறிப்பிடுவர். இதை நீங்களே வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். குறிப்பாக பச்சை பால், அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது
- வெயிற்பட்ட மேனிக்கு
பச்சை பால், சிறந்த anti-tanning குணமுடையது. வெயிற்பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. பச்சை பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்
Anti-Tanning ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?
- 5-6 பாதாம்கள், 5-6 பேரிச்சம்பழங்களை பச்சை பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்
- பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும்
- முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் விடவும்.
- முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும்.
- சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்

சமநிற மேனிக்கு
பச்சை பாலில் உள்ள lactic acid , தோல் நிறங்களை சம அளவில் வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, சருமத்தில் உள்ள டைரோசைன் என்ற சுரப்பி சுரக்கவும் பயன்படும். டைரோசைன், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும். சரும பகுதிக்கு நிறம் ஏற்றவும் உதவும்
Skin-Tanning Face Mask செய்வது எப்படி?
- பச்சை பாலில், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்
- ரோஸ் நீர் சேர்த்து கலக்கவும்
- முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்களுக்கு விடவும்.
- பின், தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.3. ஈரப்பதம் அளிக்க கூடியது
சருமத்தில் ஈரப்பதம் தங்குவதற்கான பணிகளை பச்சை பால் செய்ய கூடியது. கோடைக்காலத்தில், சருமம் ஈரப்பதத்தை இழந்துவிடும். எனவே, ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்
பச்சை பால் Moisturizing Face Mask செய்வது எப்படி?
- ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, பச்சை பால் கலந்து நன்றாக கலக்கவும்
- அரை தேக்கரண்டி தேன், ரோஸ் நீர் சேர்த்து, கலக்கவும்
- முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும்
- பின், தண்ணீரில் கழுவவும்
சரும சுத்திகரிப்பு
பச்சை பால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கூடியது. அபத்தான UV – rays எனப்படும் புற ஊதாக்கதிர்களில் இருந்து முகத்தை காக்க கூடியது. அதுமட்டுமின்றி மிருதுவான சர்மத்திற்கு பச்சை பால் பயன்படுகிறது.

பச்சை பால் FACE CLEANSING MASK செய்வது எப்புடி?
- பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும்
- முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும்
- 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் கழுவவும்
இந்த இயற்கை முறைகள் மூலம், பளிச்சிடும், மென்மையான சருமம் பெறலாம்.