முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா?கஸ்தூரி மஞ்சள் பூசுங்கள்!

வழவழப்பான, பொலிவுடன் கூடிய முகத்தை பெறத்தான் விதவிதமான க்ரீம்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ஹார்மோன் குளறுபடி மற்றும் பிற காரணங்களால் பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பலவிதமான க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது. இயற்கை பொருட்களில் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம்.இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்!

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி  மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி  சிறுது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும். 

உடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும். ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும்  ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கியபின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.

தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், உலர்ந்த துளசி பவுடர் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

நாட்டு மருந்து கடைகளில் கோரைக்கிழங்கு பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து கை, கால்களில் நீரில் கலந்து தேய்த்து வந்தால்  தேவையற்ற முடிகள் நீங்கும். நாளடைவில் முடி வளர்ச்சி மட்டுப்படும். 


Many who use honey to remove hair from their upper lip find that it’s milder than wax but similarly helps pull the hair out of its follicles. You can also include lemon juice to bleach and lighten the remaining hair. Combine 1 tablespoon of honey and ½ tablespoon of lemon juice. Excessive or unwanted hair that grows on a woman’s face, arms, back, or chest is usually coarse and dark. The growth pattern of hirsutism in women is associated with virilization. Hirsutism is not the same as hypertrichosis, which refers to excess hair in areas that aren’t dependent on androgens (male hormones).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.