முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய வீட்டிலே செய்ய க்கூடிய குறிப்புகள்!

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

 • தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
 • கோதுமை தவிடு அல்லது கோதுமை மாவு உடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
 • தேன் மூன்று மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். நோய்த் தொற்று வராமல் தடுக்கும்.
 • பழுத்த பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவி ஊற விடவும்.
 • முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு அல்லது பன்னீர் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். 
 • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
 • உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
 • புதினா சாறு எடுத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
 • முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
 • சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பாலில் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
 • தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தக்காளியை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்தவும்.இல்லையெனில் அரிப்பு ஏற்படலாம்.

Honey doesn’t just help clear dark spots, but can be used to treat acne and other skin diseases. To use honey to clear dark spots or scars, you can simply apply a thin layer of raw, organic honey to the affected area. You can mix a honey and lemon mask, or even add a little turmeric to boost the brightening properties. There is some controversy surrounding hydroquinone, but when used under the direction of a dermatologist, it can be a safe and very effective treatment for dark spots. The good news is that PIH can fade away over time, even without treatment. But time is the operative word here. It can take three to 24 months for PIH to fully fade, although in some cases it may take longer. The length of time it takes for PIH to fade depends on how dark the spot is compared to the surrounding skin.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.