இளநரையா? பலன் அளிக்கும் பாரம்பரிய முறை!

இளம் வயதிலேயே நரைமுடி வருவதற்கான காரணங்கள், சுற்றுச்சூழல், அழகுப் பொருட்களின் பக்க விளைவுகள், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை. பரம்பரையினால் வரும் நரைமுடியை ஒன்றும் செய்ய இயலாது. முறையான கூந்தல் பராமரிப்பு மற்றும் சரிவிகித உணவுகள் இளநரையை தள்ளிப்போடும். இயற்கைப்பொருட்களை கொண்டு எவ்வாறு இளநரையை போக்குவது என்று பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூ சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
  • நெய் அல்லது வெண்ணெய் கூட இள நரையை மாற்றும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். 
  • உலர்ந்த நெல்லிக்காய் வற்றல்களை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்தால், வெள்ளைமுடி நாளடைவில் மாறும்.
  • கறிவேப்பிலையை மோரில் ஊறவைத்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை  தலையில் தடவி  பத்து நிமிஷம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். 
  • கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறையும்.
  • அருகம்புல் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து இளம் சூட்டில் எண்ணெய் காய்ச்சி அதனை தேய்த்து வரலாம். 
  • தேங்காய் பாலை தொடர்ந்து தலைக்கு தேய்த்து ஊறியதும் தண்ணீரில் அலசுவதும் கூட நல்ல அணுகுமுறை.

There was a time when hair graying happened to only older people. But in our present day, due to high-stress levels and pollution, we see this even among girls as young as 16. It has become an important concern and thousands of people, men and women alike, are seeking medication. The premature graying problem is largely genetic. Hair follicles contain pigment cells that produce melanin, which gives your tresses their color. When your body stops generating melanin, hair presents itself as gray, white, or silver.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.