மாலை நேரத்துக்கு உகந்த சிற்றுண்டி சீஸ் ஊத்தப்பம் செயல்முறை!!!

பொதுவாகா நமது குழந்தைகளுக்கு சீஸ்(cheese) மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • புழுங்கல் அரிசி – 4 cup
 • முழு உளுந்து – 1 cup
 • துவரம் பருப்பு – கால் cup
 • வெந்தயம் – 4 tsp
 • உப்பு – தேவைக்கேற்ப.
 • வெங்காயம் – 2 nos
 • ப.மிளகாய் – 2 nos
 • இஞ்சி – சிறிய துண்டு
 • பூண்டு – 6 பல்
 • கொத்தமல்லி தழை – சிறிதளவு
 • துருவிய சீஸ் – 1 cup
 • எண்ணெய் – தேவைக்கு
 • கேரட் – 3 nos

வழிமுறைகள் :

 1. முதலில் வெங்காயம்,ப.மிளகாய் நறுக்கி வைத்து கொள்ளவும்.கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும, பின்பு சீஸ் துருவேண்டும்.
 2. அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.
 3. பின்பு அடுப்பில் தீ முட்டி தோசை கல் நன்றாக காய்ந்ததும் அதில் தோசை மாவை கொஞ்சம் கனமாகாக ஊற்றி அதில் மேல் துருவிய சீஸ்,வெங்காயம்,ப.மிளகாய் துவி ஒரத்தில் எண்யை ஊற்றி தோசை வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சுவையான சீஸ் (cheese) ஊத்தப்பம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.