டயாபடிக் ப்ரெண்ட்லி குழம்பு சாப்பிட்டு உள்ளீர்களா?

சர்க்கரை நோயாளிகளுக்கு என புரதம் நிறைந்த ரெசிபிகள் இருந்தாலும், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கவலையில்லை. மீன், முட்டை, சிக்கன் என்று நிறைய வகைகள் உள்ளது. சைவ உணவுப்பிரியர்களுக்கு குறைவான வகைகள் தான். அதில் புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள் என்று கூறினாலே பச்சைப்பயறு தான் நினைவுக்கு வரும்.

பச்சைப் பயறை வேகவைத்து, முளைகட்டி, தோசையாக, குழம்பு என தினந்தோறும் ஏதோவொரு வகையில் சமையலில் இடம்பெறும் வகையில் மெனுவை தேர்ந்தெடுக்கவும். பச்சைப்பயிறு குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • பச்சை பயறு – 1 கப்
 • பெ.வெங்காயம் – 1
 • தக்காளி – 2
 • மல்லித் தூள் – 1
 • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
 • கரம் மசாலா – 1 ஸ்பூன்
 • சீரகம் – 1 ஸ்பூன்
 • தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • கொத்தமல்லி – சிறிது

செய்முறை

 • முதலில் பச்சைப்பயறை கழுவி குக்கரில் போட்டு, அளவானதண்ணீர் ஊற்றி உப்பு போட்டு, 3 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
 • தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள் மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
 • பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, இதனுடன் வேகவைத்த பச்சைப் பயிறை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, சிறிதளவு உப்பு போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். ருசி பிடிக்கும் என்றால் எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து கொள்ளலாம்.
 • சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி இந்த குழம்பு சப்பாத்தி தோசை இட்லிக்கு, சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Green gram is a small, oval-shaped bean that you can cook before or after soaking. Once cooked, the bean is sweet and soft in texture, and it is easily digested, so it doesn’t produce flatulence like many other legumes. The mung bean has an olive green husk and a dark-mustard-colored interior. The dried bean is often split to expedite cooking and sold as green dal. If it has been hulled before splitting, only the yellow endosperm remains, and the bean goes by various names including moong dal and mung dal. Green gram dal, which still has the husks, maintains its shape better when cooking, while moong dal becomes soft and mushy like porridge. Because of their soft consistency, dals are used for stews, soups, salads and desserts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.