பேலியோ டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ரெசிபி தான் காலிஃப்ளவர் புதினா ரைஸ்!

பேலியோ டயட் எனப்படும் ஆதிமனிதன் டயட்டில் புரதம் மிகுந்த அசைவ உணவுகள் அசைவம் உண்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. சைவம் உண்பவர்களும் பேலியோ டயட் கடைப்பிடிப்பது சிரமம் இல்லை.

காலிஃப்ளவர் எடைக்குறைக்க உதவும் என்பதால் காலிஃப்ளவர்  வைத்து பல்வேறு விதமான உணவுகள் சமைக்கப்படுகிறது. குறைந்த கலோரி மதிப்பு உள்ளது தான் காலிஃப்ளவர். இதில் விட்டமின் சி, கே மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் குறைவு என்பதால் பேலியோ டயட்டில் பரிந்துரை செய்யப்படுகிறது. தானியங்கள் உபயோகம் செய்யும் இடத்தில் அதற்கு மாற்றாக காலிஃப்ளவர் உபயோகித்து பல ரெசிபிகள் செய்யப்படுகிறது.

காலிஃப்ளவர் – புதினா ரைஸ்

தேவையான பொருட்கள்

 • காலிஃப்ளவர் – 1
 • பெரிய வெங்காயம் – 1
 • பச்சை மிளகாய் – ருசிக்கேற்ப
 • இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 • புதினா – 1 கைப்பிடி அளவு 
 • எண்ணெய்  – 1 ஸ்பூன்
 • நெய் –  1 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 • காலிஃப்ளவரை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். 
 • சூடு ஆறியதும் சிறு துணுக்குகளாக பிரித்து கொள்ளவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 • புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். 
 • வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 • அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
 • பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.  காலிஃப்ளவர் – புதினா ரைஸ் ரெடி.

குறிப்பு

இதில் உதிரியாக வேகவைத்த சாதத்தை கலந்து, தேவையான உப்பு சேர்த்தால் நார்மல் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ரெசிபி.


Proponents of the paleo diet argue that modern humans aren’t so genetically different from humans who lived during the Paleolithic era (which spanned from approximately 2.5 million to 10,000 years ago). Those Paleolithic humans typically ate lots of lean meats, fish, fruits, veggies, nuts and seeds. But when farming was invented about 10,000 years ago, it drastically altered the average human diet. Many people began eating grains, legumes and dairy products on a daily basis, and that trend has continued to this day. Proponents of the paleo diet argue that such products became a huge part of the human diet well before our bodies had time to adapt to them, which has contributed to a myriad of public health issues.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.