மாலை நேரம் ஸ்நாக்ஸ் மிளகு போண்டா!!

பொதுவாக குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த மிளகு போண்டா. இன்று இந்த சுவையான மிளகு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

போண்டாவிற்கு தேவையான பொருட்கள் :

  • உளுந்து – 1 cup
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
  • மிளகுத்தூள் – 1 tsp
  • பச்சை மிளகாய் – 1 nos
  • பல்லு பல்லாக கீறிய தேங்காய் – 3 tsp
  • கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

  • உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து ….உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, nice-ஆக அரைத்து கொள்ளவும்.
  • அரை மாவுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான மிளகு போண்டா ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.