தின்ன தின்ன தெவிட்டாத பிரட் குளோப் ஜாமுன் செய்முறை!

இனிப்பு இல்லாத விருந்துமில்லை.இனிப்பை விரும்பாதவரும் எவரும் இல்லை. எத்தன்னைவித இனிப்புகள்.‌.. ஒரே மூலப்பொருள் வேறு வேறு சுவை.சர்க்கரை, மைதாவை தடை செய்தால் இந்திய ஸ்வீட் ஸ்டால்களில் ஈ கூட மொய்க்காது. சர்க்கரை நோய், எடை பருமன், பல்சொத்தை, செரிமானக் கோளாறு என எத்தன்னை நோய்கள் இனிப்பால் படையெடுத்தாலும், இனிப்பு மீதான ஆசையை, காதலை, வெறியை…. இன்னும் வேறு ஏதாவது சரியான வார்த்தை இருக்கிறதான்னு தெரியலையே!

சட்டென்று நினைவுக்கு வரும் இனிப்புகளை பட்டியலிட்டால் லட்டு, ஜிலேபி, அல்வா, பர்பி என்று அடுக்குவோம்.vவீட்டில் என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசனை கேட்டால், அனைவரது பதிலும் ஜாமுன் என்று தான் வரும்.

எப்போதும் கடையில் வாங்கிய ஜாமுன் மிக்ஸ் தானா? வித்தியாசமான சுவையில் முயற்சி செய்யும் போது தான் சமையலில் ஆர்வம் பிறக்கும்.புதிதாக கற்றல் என்பது கம்பியூட்டர் கோர்ஸ், டிகிரி படிப்பது என்பது மட்டும் அல்ல, சமையலும் ஒரு அறிவியல் தான்.மூளைக்கு பயிற்சி தான். கவனத்துடன் செய்ய வேண்டிய செயல் தான்.

குளோப் ஜாமுன் பெர்ஷியாவில் இருந்து அதாவது ஈரானில் இருந்து மொகலாயர்களால் கொண்டு வரப் பட்ட இனிப்பு. குளோப்(gulab) ரோஜா என்று அர்த்தம். ஜாமுன் என்பது நாவல் பழம். ஜாமுனின் அளவு நவாபழங்களை நினைவுக்கு கொண்டு வருவதால் இந்த பெயர். பெர்ஷியாவில் ஜாமுன்களை பொரித்து ரோஸ் சிரப்பில் வைத்து உண்பார்களாம்.

காதல் மன்னன் ஷாஜகானின் தலைமை சமையல் கலை நிபுணர் மன்னரை சமையலில் கவர அறிமுகப்படுத்திய இனிப்புக்கு இன்று இந்தியாவே அடிமைப்பட்டு உள்ளது.

பிரட்டில், ரவையில் என்று விதவிதமாக குளோப் ஜாமுனை முயற்சி செய்கிறார்கள்.

பிரட் குளோப் ஜாமுனும் செய்து தான் பார்ப்போமே!

Preparation time – 15minutes
Cooking time – 20minutes
Category – sweet

தேவையான பொருட்கள் :
பிரட் – 10 ஸ்லைஸ்
பால் – 1 கப்
சர்க்கரை – 1/4 கிலோ
பேரிட்சை அல்லது முந்திரி

செய்முறை :

  • பிரட்டின் ஓரங்களை வெட்டி எடுக்கவும். பிரௌன் நிற துண்டுகளை வீணாக்காமல் ப்ரீசரில் வைத்து பிறகு பொடியாக்கினால், பிரெட் கிரம்ஸ் ரெடி.
  • பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
  • பொடித்த பிரட்டை பால்விட்டு ஜாமுன் மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு கப் சர்க்கரைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கம்பி பதத்திற்கு முன் இறக்கி விடவும். பாகு இறுகாமல் இருக்க எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விடவும்.
  • பிரட் மாவை உருட்டி உள்ளுக்குள் பேரிட்சை அல்லது முந்திரியை ஸ்டப் செய்து பொரித்து எடுக்கவும்.
  • பொரித்த உருண்டைகளை பாகில் ஊறவிட்டு பரிமாறவும்.

Gulab Jamun is a popular sweet in India, Nepal, Pakistan, Sri Lanka and Bangladesh. It is mostly enjoy in festive and celebreation meals. It is a berry sized ball dipped in sugar syrup for the delicious taste. It is made mainly from milk solids, traditionally from Khoa, which is milk reduced to the consistency of a soft dough. Bread Gulab Jamun is prepared only using bread instead of milk powder or any flour. It is garnished with dried nuts such as almonds to enhance flavour.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.