
தினமும் காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Oats-யில் நிறைந்திருக்கும் Antioxidants மற்றும் Avenanthramides மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- கெட்டி சிவப்பு அவல் -1/2 cup
- தேங்காய்ப்பால் -1 cup
- பெரிய வெங்காயம் – 1 nos
- தக்காளி – 1 nos
- நிலக்கடலை – 1 tsp
- எண்ணெய் – 2 tsp,
- சீரகம் – 1/2 tsp
- உப்பு – சுவைக்கேற்ப,
- கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு.
- காய்ந்த மிளகாய் – 4 nos
செய்முறை:
- தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.
- நிலக்கடலையை வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 tsp எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும், இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.
- கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
இதில் தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.