புரோட்டீன் நிறைந்த பச்சை இட்லி செய்முறை!

தென்னிந்திய உணவான இட்லி உலக அளவில் பரவி, பிரபலமான இந்திய உணவுகளில் இட்லியும் ஒன்று. இட்லியா என்று அலுத்துக் கொண்டாலும், வாரம் ஒரு முறையாவது இட்லி சாப்பிட வில்லையென்றால்  ஏதோவொரு இழப்பு போல தோன்றும்.

நிறைய புரோட்டினையும், விட்டமின்களும், நார்ச்சத்தும் நிரம்பிய பச்சைப்பயறை சுண்டல், குழம்பு, கடைசல், தோசை பெசரட், முந்திரி கொத்து என பலவிதமான ரெசிபிகள் நிறைய நம்மிடையே உண்டு.

எண்ணெய், இனிப்புகள் சேர்த்தாமல் சத்துக்களும் வீணாகாமல் ஆவியில் வேக வைத்த பச்சைப்பயறு இட்லி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.அரிசி சேர்க்காமல் செய்வதால் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்லதொரு மாற்று உணவு.

தேவையான பொருட்கள் :
பச்சைபயறு – 1 கப்
உளுந்து – 1/2 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு

தேவையெனில்
காரட்
பச்சைமிளகாய்
கொத்தமல்லி
கறிவேப்பிலை

செய்முறை :

  • பச்சைபயிறை கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஊறவைக்கவும்.
  • இட்லி மாவு பதத்தில் பச்சைப்பயறை அரைக்கவும்.
  • உளுந்து வெந்தயம் இரண்டையும் அரைத்து பச்சை பயிறு மாவோடு உப்பு போட்டு வைக்கவும்.
  • மேற்கண்ட கலவையை எட்டு மணி நேரம் புளிக்க வைத்து பிறகு இட்லி சுடவும் .
  • பச்சை நிறத்தில், ஹெல்த்தியான பச்சைப்பயறு இட்லி தயார்.
  • துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலையை மாவு கலவையில் சேர்த்து இட்லி செய்யலாம்.
  • காரசாரமான தக்காளி சட்னியுடன் பச்சைக் கலரில் இட்லி கண்களுக்கு மட்டும் அல்ல, நாவுக்கும் விருந்து.

Green gram idli or Pachai payaru idli or Moong dal idli is a South Indian Idly variety. Green gram idli along with Tomato, Onion Chutney and Sambar is a healthy breakfast for all. It has a high source of nutrients such as manganese, potassium, magnesium, folate, copper, zinc and various B vitamins. It is also a very filling food, high in protein, resistant starch and dietary fiber. Green Gram sprouts are low in calories, have fiber and B vitamins, and deliver a boost of vitamins C and K. Follow the procedure to prepare a healthy breakfast with green gram.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.