மண்பாத்திரங்களை பக்குவப்படுத்த இத தான் முதல செய்யணும்!

மீண்டும் இயற்கையோடு இணைந்து வாழ நினைத்து விட்டோம் என்பதே வரவேற்கதக்க முடிவு. உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உணவு சமைக்கும் முறைகளும் தான். அலுமினியம், நான் – ஸ்டிக் தவிர்த்து வேறு பாத்திரங்கள் என்று நினைத்தாலே மண்பாண்டங்கள் தான் நினைவுக்கு வரும்.

ஃப்ரிட்ஜ் வருவதற்க்கு முன் பானைத்தண்ணீரே நமக்கு தாகம் தீர்த்தது. கீரை மசியலில் இருந்து மீன் குழம்பு வரை மண்பானையே பிரதானம். விறகடுப்பில் மண்பானை சமையல் என்பது போய் கேஸ் அடுப்பில் சமையல் என்ற அளவிற்க்கு நிலைமை மாறிவருகிறது.

சுட்டபானையாக இருந்தாலும் மண்பானையை பழக்கவேண்டும். இல்லையெனில் அதிகவெப்பத்திற்க்கு கீறல் விட்டுவிடும்.

மண்பானையை பழக்கப்படுத்துவது எப்படி?

  • நல்ல தரமான மண்பானையை வாங்கியதும் அதனை நன்கு கழுவவும்.
  • அதனை ஒர் இரவு முழுவதும் வாளி நிறைய தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • ஊறிய பானையை நல்ல சுட்டெரிக்கும் வெயிலில் காயவைக்கவும்
  • நான்கைந்து மணி நேரத்திலே பானை காய்ந்துவிடும்.
  • ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பானையின் உட்பகுதியை நன்கு தேய்த்தெடுக்கவும் .
  • இதனை கழுவியதும் அரிசி களைந்த நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

மண்பானையை கெமிக்கல்கள் மற்றும் ஸ்கரப்பர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டாம். பானையில் தண்ணீர் ஊற்றி பேக்கிங் சோடா சேர்த்து ஊறவைத்தால் போதும், மீன் வாடை எல்லாம் ஓடிவிடும்.

மண்பானையில் சமைக்கும் போது, உணவில் உள்ள சத்துக்கள், விட்டமின்கள் வீணாவதில்லை ஆகவே தான் உணவு ருசியாக உள்ளது. மண்ணில் இயற்கையிலே காரத்தன்மை உள்ளதால் உணவில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து சமநிலையாக்குகிறது.


Earthen cookware/utensils/Pot (Manchatti/ Manpaanai in Tamil) retain all nutrients to the food and provides minerals such as calcium, magnesium, iron, phosphorous. In order to clean clay or earthen vessels, do not use soap or detergent as the soap will stay in the pores of clay and percolate into the food or water. Soap can be replaced by baking soda, salt or simply hot water and a stiff brush can be used to clean the pot. It has natural cooling springs where water gets evaporated quickly through the pores. Clay cookware is suitable and safe for all types of cooking(fry, bake, braise) and it is highly beneficial compared to aluminum and non-stick.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.