உணவுகளின் சுவை கூட்டும் மாங்காய் பொடி வீட்டிலே ஈஸியா செய்யலாம்!

இந்திய உணவுகள் என்றாலே பல்வேறுவிதமான மசாலாக்களின் சேர்மானங்கள் தான். ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் பிரத்யேக மசாலாவும் அதன் பயன்பாடும், அதன் ருசிக்கு அடிமையான சாப்பாட்டு பிரியர்களும் தான்.

உதாரணமாக பருப்பு பொடி, இட்லிப்பொடி, எள்ளுப்பொடி என்றாலே ஓ… தமிழர்கள் என்று கணித்து விடலாம். பப்புபொடி… சுந்தரதெலுகு மாட்லாடும் ஆந்திராவாலாக்கள், தேங்காய் சம்மந்தி பொடி.. சந்தேகமே வேண்டாம் நம்மட கேரளம் தான்.

இதே ரீதியில் உணவைப் பற்றி சிந்திக்கும் போது, நம்ம ஊரு சுண்டல்களில் வாசனை தரும் சாட் மசாலா. சாட் மசாலாவின் புளிப்புக்கு என்ன காரணம் என்று பார்த்தால், “ஆம்ச்சூர் பொடி”, தான்.

ஆம்ச்சூர் பொடி
வட இந்திய உணவுகளின் மணத்திற்கு காரணம் இந்த ஆம்ச்சூர் பொடி தான். ஆம்ச்சூர் பொடி என்பது வேறு ஒன்றும் இல்லை.மாங்காயை பொடி செய்து, புளிப்பு சுவை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாங்காய் சீசனில் மாங்காயின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆம்ச்சூர் பொடியை சட்னி, குருமா, கூட்டு, சாலட் வகைகளில் சேர்த்தும் போது அதன் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கிறது.எலுமிச்சையின் இடத்தில் மாங்காய் பொடி சுவையூட்டுகிறது.

ஆம்ச்சூர் பொடி தயாரிப்புமுறை :

  • நன்கு விளைந்த பச்சை மாங்காயை கழுவி சுத்தமாக்கி கொள்ளவும்.
  • மாங்காயின் தோல்களை நீக்கிக் கொள்ளவும்.
  • தோல் சீவிய மாங்காய்களை நீளமான துண்டுகளாக நறுக்கவும்.
  • சுத்தமான வெள்ளைத் துணியில் மாங்காய் துண்டுகளை பரப்பி நல்ல சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும்.
  • மாங்காய் துண்டுகள் நன்கு காய்ந்து  ஒடித்தால், உடையும் வரை காயவிடவும்.
  • காய்ந்த துண்டுகளை பவுடராக்கி கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் சலித்துக் கொள்ளவும்.
  • காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

சீசனில் மட்டுமே கிடைக்கும் மாங்காய்களை ஊறுகாய், தொக்கு, மாங்காய் பொடி என பத்திரப் படுத்தி அடுத்த சீசன் வரும் வரை மாங்காய்களை பயன்படுத்த சிறந்த முறை.


Amchoor or amchur, also referred as mango powder, is a fruity spice powder made from dried unripe green mangoes. Amchur powder improves your digestion and helps to fight acidity. Mango contains powerful antioxidants, which ensures good bowel movement and helps combat constipation and flatulence. It is extensively used in many of the Indian cooking. It is very popular in India and is used in several Asian cuisines. Follow the above instructions to prepare delicious amchur powder.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.