சத்தான சாமை அரிசி சாம்பார் சாதம் செய்முறை!

சிறுதானியங்கள் வரிசையில் சாமை அரிசியும் உண்டு. நல்ல சுவையான சாமை அரிசி கொண்டு பலவிதமான ரெசிபிகள் செய்கிறார்கள். அரிசியில் செய்யும் ரெசிபிகள் அனைத்தும் சாமையில் செய்ய முடியும். சாமை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை குறைக்கிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நார்ச்சத்து நிறைந்த சாமை நல்ல பலன் தரும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், இதனை முதன்மை உணவாக கொள்ளலாம்

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 2கப்

பீன்ஸ், கேரட் – 200 கிராம்

கத்திரிக்காய், தக்காளி – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 8

துவரம் பருப்பு,உளுந்தம் பருப்பு – ஒரு கப்

சின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு

முருங்கைக்காய் – 1

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு, கடுகு, மஞ்சள்தூள்

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

சாம்பார் பொடி

நெய்

சீரகத்தூள்

பெருங்காயத்தூள்

நல்லெண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

  • சாமை அரிசியை கழுவி ஊறவைக்கவும்.
  • புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
  • காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்
  • துவரம் பருப்பை, பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
  • அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் தாளித்த பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  • காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
  • அடுத்து அதில் ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். சாமை விரைவில் வெந்து விடும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  • சாமை வெந்து குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.
  • கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

தயிர் பச்சடி, சிப்ஸ், வடகம், அப்பளம், வடை, உருளைக்கிழங்கு பொரியல் அனைத்தும் இந்த சாம்பார் சாதத்துடன் சாப்பிட ஏற்றது.


Little millet known as Saamai Rice in Tamil has several health benefits such as weight loss, constipation, decreases high blood pressure and controls diabetes. It is a rich source of antioxidants. Use Saamai Rice to prepare yummy Sambhar Sadham Recipe by following above steps.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.