கோடையை கொண்டாட ஸ்பெஷல் லஸ்ஸி!

அனல் வீசும் கோடைகாலத்தில் என்ன செய்து சூட்டை தணிக்க தவிக்கும் மனநிலை தான் நமக்கு.வீட்டுக்குள் நிலவும் சூட்டை பேன் , ஏசியின் தயவால் குறைத்து கொள்கிறோம்.

உடல் சூட்டை தணிக்க எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை.குடிக்கும் நீரின் அளவு அதிகரிக்கவும் , அதனை சத்துள்ள தாகவும் மாற்றும் வகையில் நம் பாரம்பரிய ரெசிபிகள் நிறைய உள்ளன.அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

மசாலா மோர் 

புளிக்காத தயிரை எடுத்துக் கொண்டு , அதில் சிறிது குளிர்ந்த நீர் சேர்த்து நன்கு கடையவும்.அல்லது மிக்ஸியில் அடிக்கவும். வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

சின்ன வெங்காயம் , இஞ்சி , பச்சை மிளகாய் , இரண்டு இணுக்கு கருவேப்பிலை அனைத்தையும் ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.இந்த கலவையை மோரில் கலந்து , தேவையான உப்பு சேர்த்து பருகலாம்.

இன்னும் சுவையை கூட்ட பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் , வெள்ளரிப் பிஞ்சுகளை சேர்க்கவும்.

லஸ்ஸி

தயிர் கொண்டு தயாரிக்கும் எளிய பானமே லஸ்ஸி.நல்ல கட்டித்தயிர் , ஐஸ் வாட்டர் , சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும் .நுரை ததும்பும் லஸ்ஸியை கோப்பையில் பரிமாறவும். வெயிலுக்கு இதமாக பருகலாம்.

இதன் சுவையை கூட்ட ஏலக்காய் தூள் , டிரைப்ரூட்ஸ் , டுட்டி ப்ருட்டி சேர்த்து அலங்காரம் செய்யலாம்.

குழந்தைகளை கவர லஸ்ஸியின் மீது ஒரு கரண்டி ஐஸ்கிரீம் வைத்து கொடுக்கவும்.நொடியில் லஸ்ஸி தீர்ந்துவிடும்.

மாம்பழ லஸ்ஸி

கனிந்த மாம்பழத்துண்டுகள் , கட்டி த்தயிர் , ஐஸ் கட்டிகள் , சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.நுரை ததும்பும் லஸ்ஸியை பொடித்த டிரை ப்ரூட்ஸ் சேர்த்து பரிமாறவும்.

பேடா லஸ்ஸி

லஸ்ஸியிலே மிகுந்த சுவையும் , அதிக கலோரிகள் உள்ள லஸ்ஸி தான் இது. வேறோன்றுமில்லை வழக்கம்போல கட்டித்தயிர் , ஐஸ் கட்டிகள் , பால் பேடா இல்லையெனில் பால்கோவா சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.இனிப்பு தேவையெனில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.பரிமாறும் போது திக்கான க்ரீம் சேர்த்து பரிமாறவும்.பாதாம் , பிஸ்தா தூவி அலங்கரிக்கவும் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

ரோஜா லஸ்ஸி

கட்டித்தயிர் , சர்க்கரை , ஐஸ்கட்டி , ரோஜாகுல்கந்து சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.ரோஜா வாசனையில் அருமையான லஸ்ஸி தயார்.ரோஜா குல்கந்து இல்லாவிடில் ரோஜா சிரப் சேர்த்து செய்யலாம்.

இந்த கோடையை விதவிதமாக லஸ்ஸிகள் செய்து சமாளியுங்கள்!


Lassi is a popular authentic Indian recipe is made with curd. It is mostly consumed during summer season. It helps to reduce body heat and keeps body cool and hydrated. It is a very healthy drink and there are so many different types of lassi. You can make curd lassi, sweet lassi, fruit lassi, dry fruit lassi, banana lassi, milk lassi, mango lassi, pineapple lassi, ice cream lassi, salt lassi, mint lassi, strawberry lassi, chocolate lassi, namkeen lassi, rose lassi, papaya lassi, kesar lassi, lemon lassi, ginger lassi, etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.