சிம்ப்ளெலகா Broccoli Gravy (ப்ரோக்கோலி கிரேவி)செய்வது எப்படி என்று பார்க்கலாம்!!!

இந்த Gravy சப்பாத்தி, நாண் போன்ற உணவு உடன் தொட்டு சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இது ஒரு இரவு உணவிற்கு விருந்தாக அமையும் . இன்று இந்த Recipe-ஐ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள் இதோ :.

 • ப்ரோக்கோலி – கால் கிலோ
 • சீரகம் – அரை டீஸ்பூன்
 • ஏலக்காய் – 2 nos
 • வெங்காயம் – பாதி
 • இஞ்சி பூண்டு விழுது – முக்கால் டீஸ்பூன்
 • தக்காளி விழுது – அரை கப்
 • முந்திரி – 5 nos
 • மஞ்சள் தூள் – கால் tsp
 • மிளகாய்த்தூள் – 1 tsp
 • மல்லித்தூள் – 1 tsp
 • சீரகத்தூள் – அரை tsp
 • கரம் மசாலா – கால் tsp
 • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 • முதலில் Broccoli-ஐ எடுத்து நன்கு கழுவி துண்டு துண்டாக நறுக்கி அதை சுடு தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.
 • முந்திரியை எடுத்து விழுதாக நன்கு அரைத்து கொள்ளவும்.
 • அதன்பின் வாணலில் எண்ணெய்விட்டு சூடானதும், சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • அதை தொடர்ந்து, அரைத்து வைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.
 • அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
 • பின்னர், அரைத்து வைத்த முந்திரி விழுது, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
 • இந்நிலையில், Broccoli-ஐ சேர்த்து நன்கு கிளறி மூடிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.கடைசியில் கொஞ்சம் கொத்தமல்லியை நன்றாக Chop செய்து சேர்க்கவும் .

அவ்ளோதான் சுவையான Broccoli Gravy ரெடி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.