மார்பு சளிக்கு தீர்வு தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம் !!!

இருமல் (cough), சளி ,தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கற்பூரவள்ளி, சுக்கு சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த ரசம் உங்களுக்கு மார்பு சளியில் இருந்து விடுபட முழுமையான தீர்வு தரும். இப்பொழுது நாம் அதன் செயல்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • கற்பூரவள்ளி இலை – 5 nos
 • சுக்கு – ஒரு சிறிய துண்டு
 • மிளகு – 1/2 tsp
 • கடுகு மற்றும் சீரகம் -1 tsp
 • துவரம்பருப்பு – 2 tsp
 • தக்காளி சாறு – 2 cup
 • நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 • முதலில் கற்பூரவள்ளி இலையை எடுத்து நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • அதன்பின் வாணலில் சிறிது எண்ணெய் சேர்த்து, ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக  அரைக்கவும்.
 • இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 mins கொதிக்க வைக்கவும்.
 • மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

ஆரோக்கியமான கற்பூரவள்ளி சுக்கு ரசம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.