கொழுப்பை குறைக்கும் கொள்ளுப்பால்!

கொள்ளு என்பது ஒட்டுமொத்த நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஆரோக்கிய பெட்டகம்.விலை மலிவான , எளிதாக கிடைக்கும் பெரும்பாலோனோர் தவிர்க்கும் பயறு வகைகளில் ஒன்று.

இதன் பயன்களை பற்றி அறியாமல் அல்லது செய்முறை தெரியாமல் சமையலுக்கு பயன்படுத்தும் மக்கள் குறைவு.கொள்ளுரசமும் , கொள்ளு பருப்பு மசியலும் சுடுசாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு நெய்யுடன் குளிர்காலத்தில் நம் அம்மாவோ , பாட்டியோ பரிமாற உண்ட உணவு . எந்த நட்சத்திர விடுதிகளிலிலும் கிடைக்காத பாரம்பரிய உணவு.

கொங்கு மண்டலத்தில் உணவில் கொள்ளு பயன்பாடு அதிகம்.அதிலும் குறிப்பாக முதல் நாள் அசைவ உணவு சாப்பிட்டால் மறுநாளே கொள்ளு பருப்பு வகைகள் செய்து , அசைவ உணவால் உடலில் சேர்ந்த கொழுப்பை கரைத்து விடுவார்கள்.

கொள்ளுவில் உள்ள அதிக அளவு புரதம் சாமானிய மக்களின் புரத தேவையை எளிதாக நிறைவு செய்கிறது. இதன் இயல்பான உஷ்ணதன்மையானது

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து , கொழுப்புகளை , கொழுப்பு அமிலங்கள் ஆக மாற்றி செரிமானம் அடையச் செய்கிறது. ஊளைச்சதைகள் இறுகி உறுதியாகிறது. குதிரையின் கட்டுடல் ரகசியம் கொள்ளு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கொள்ளை மணம் வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுத்து பயன்படுத்தும் போது , அதன் சத்துக்கள் வீணாகாமல் முழுமையாக உடல்கிரகித்துக்கொள்ள ஏதுவாகிறது.கொள்ளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து பின் நீரை வடிகட்டி , நல்ல காற்றோட்டமான இடத்தில் , போதிய வெளிச்சம் அதாவது சூரிய ஒளி கிடைக்குமாறு வைத்தால் இரண்டிலிருந்து மூன்று நாட்களில் முளைத்து விடும்.

வழக்கமான கொள்ளு மசியல் , ரசம் , துவையல் , குழம்பு தவிர்த்து , சத்துக்கள் வீணாகாமல் முழுமையாக அதனை பயன்படுத்தி நன்மை பெற முளைகட்டிய பயறு தான் சிறப்பு.இதனை அரைத்து பாலெடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

கொள்ளுப்பால்

  • முளைகட்டிய கொள்ளு  – 1 கப்
  • தேங்காய் துருவல் – 1/4 கப்
  • வெல்லம் – தேவையான அளவு
  • ஏலக்காய் – 1 – வாசனைக்கு தேவையெனில்

செய்முறை 

  • சுத்தம் செய்த முளைகட்டிய கொள்ளு , தேங்காய் துருவல், வெல்லம் , ஏலக்காய் உலக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
  • இதனை உடனே பருகவும்.தினசரி எடுத்து கொள்ளவேண்டாம்.
  • வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை போதும்.
  • சூப் பிரியர்கள் வெறும் கொள்ளுப்பாலை வழக்கம்போல சூப் செய்யலாம்.

இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு”, என்ற பழமொழியை நினைவில் கொண்டு , அன்றாட வாழ்வில் அளவாக கொள்ளுவை பயன்படுத்தி அளவிலா கொழுப்பை குறைப்போம்!


 Horse gram is one of the healthy food which is popularly known for its fat burning property. It is a great home remedy for the people who want to lose weight and fats easily. Horse gram is also good for people with diabetes and asthma. It helps you to increase metabolism and starts fat burning process in our body. This is one of the best weight loss drink to lose weight naturally.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.