இரத்த சோகையை விரட்டி அடிக்கும் ஆட்டுஈரல் வறுவல் செய்முறை!

லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு உடலில் உள்ள நச்சு(Toxin) தன்மையை மட்டுப்படுத்தும். கல்லீரல் நச்சுதன்மையை சேமித்து வைப்பதில்லை.

அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமானது தான் ஈரல். ஈரலின் மென்மைத் தன்மை மற்றும் அதனுடைய அதிகமான ருசியும் தான் ஈரலை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஈரல் உண்பதால் எளிதாக கிடைக்கும் பயன்கள் காரணமாக மாதம் ஒரு முறையாவது ஈரல் சமைத்து சாப்பிடலாம். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை உட்கொண்டால் விரைவில் இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஈரலில் உள்ள இரும்புச் சத்தை உடல் எளிதாக கிரகித்துக் கொள்ளும். சோடியம் சத்து குறைவாக உள்ள உணவு வகையில் ஈரலும் ஒன்று.

ஏ, பி12, ரிபோப்ளேவின், செலினியம், துத்தநாகம் என நுண் தனிமங்கள் நிறைந்தது தான் ஈரல். கொலஸ்டிரால் அதிகம் உள்ள உணவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரல் வறுவல்

தேவையான பொருட்கள்

ஆட்டு ஈரல் – 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1கப் நறுக்கியது
கறிவேப்பிலை – கையளவு
கொத்தமல்லி தழை

செய்முறை

1. ஆட்டு ஈரலை நன்கு கழுவி சுத்தமாக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2. நறுக்கிய ஈரலுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து கைகளால் பிசைந்து பிறகு அதனை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வரும் வரை மெல்லிய தீயில் வேகவிடவும்.

3. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4 வதங்கிய வெங்காயத்துடன் வேகவைத்த ஈரலை சேர்த்து வேகவிடவும். குக்கரில் ஈரலுடன் கிடைத்த நீரையும் சேர்த்து வேகவிடவும்.

5. நீர் வற்றி வரும் போது காரம் உப்பு பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.

6. வெந்த ஈரலுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்,

சூடான ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன்.


Lamb Liver/Mutton Liver(Eeral) fry recipe benefits people who suffer from anemia which is an iron deficiency. Consuming Liver increases Red Blood Cells at the earliest. Liver is a rich source of vitamin A, B12, riboflavin, selenium, zinc and it is high in Cholesterol. The recipe can be prepared easily with few ingredients such as ginger garlic paste, onion and chili powder and optional pepper. Follow the simple steps given to get benefit of goat liver.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.