இந்த கோடையில் சிறுதானியங்களில் வடகம் போடுவோமா?

அரிசிக்கு மாற்றாக இப்போது பரவலாக சிறுதானியங்கள் பயன்பாட்டில் உள்ளது. சிறுதானியங்கள் உபயோகித்து பலகாரங்கள் வரிசையில் வற்றல், வடகம் என்று அடுத்தக்கட்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கது. சிறுதானிய வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

சாமைக் கூழ் வற்றல்

சிறுதானியங்களில் சுவையானது சாமை தான்.

தேவையானவை

 • சாமை – 250 கிராம்
 • ஜவ்வரிசி – 50 கிராம்
 • சீரகம் – 1டீஸ்பூன்
 • பெருங்காயம் – கால் டீஸ்பூன்
 • புளித்த மோர் – 1/2 கப்
 • உப்பு – தேவையான அளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • பச்சைமிளகாய் – 2

செய்முறை

 • சாமை அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். 
 • உப்பு சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும்.
 • பெரிய குக்கர் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அரைத்து புளித்த மாவை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
 • புளித்த மோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும். மோர் வாசனை வேண்டாதவர்கள் தவிர்க்கவும்.
 • இந்த கலவையுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். 
 • கெட்டியாக கூழ் பக்குவத்தில் காய்ச்சி ஆற விடவும்.
 • ஸ்பூனால் எடுத்து, பாலிதீன் ஷீட்டில், வட்ட வட்டமாக ஊற்றவும். 
 • நன்கு காய வைத்து எடுத்து, தேவைப்படும் போது பொரிக்கவும். சாமைக் கூழ் வற்றல் தயார்.

வரகு முறுக்கு வற்றல்

வரகை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தேவையெனில் சலித்து எடுக்கவும்.

தேவையானவை

 • வரகு மாவு – 250 கிராம்
 • ஜவ்வரிசி – 50 கிராம்
 • உப்பு – தேவையான அளவு
 • பெருங்காயம் – கால் டீஸ்பூன்
 • பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன்
 • எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

செய்முறை

 • ஜவ்வரிசியை முதல்நாள் இரவு தனியே ஒரு பாத்திரத்தில் ஊற விடவும். 
 • காலையில் பச்சைமிளகாய் விழுது, பெருங்காயம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கலந்து வைக்கவும்.
 • மேற்கண்ட கலவையில் வரகு மாவு சேர்த்துக் கலக்கவும்.
 • வரகுமாவுக்கலவையுடன் மூன்று மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கிளறவும்.
 • கலவை வெந்து, கெட்டியானதும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். 
 • ஆறிய கலவையை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து நன்றாகக் காயவிட்டு எடுத்தால் வரகு முறுக்கு வற்றல் ரெடி.

This is a summer special snacks recipe which is prepared at every south indian home. Summer is all about making pickle and vathal at home. If preparing large quantity, helping hands are sure needed. Make sure to completely dry the vathal because sometimes the outer layer dries soon but the middle part takes time. Store sun dried onion vathal in a clean container and fry them when needed. Vathal is a famous south indian dish. It is prepared with pirandai. This is so tasty and is widely available in the market. These vathal are available at market leading prices.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.