காரசாரமாக மசாலா அரிசி பொரி – ஈசி வீட்டு நொறுக்கு தீனி!

செலவு குறைந்த உடலுக்கு கேடு தராத ஒரு மாலை நேர ஸ்நாக் என்றால் அது பொரி தான். சிலருக்கு மசாலா பொரியாக தாளித்து சாப்பிடுவது பிடிக்கும். சிலர் சாலட்டுடன் பொரியை சேர்த்து உண்பது பிடிக்கும். பொரியை காரசாரமாக சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற ரெசிபி தான் இது. இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • பொரி – 3 கப்
 • உருளைக்கிழங்கு – 2
 • தக்காளி – 1
 • பச்சை மிளகாய் – 5
 • காராப்பூந்தி/சேவு/ஓமப்பொடி/மிக்ஸர் – 1/2 கப்
 • வேகவைத்தகருப்பு கொண்டைக்கடலை – 1/2 கப்
 • உப்பு – தேவையான அளவு
 • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 • ஊறுகாய் மசாலா– 1 டீஸ்பூன்
 • கொத்தமல்லி – சிறிது
 • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 • தேங்காய் துண்டுகள் – சிறிது

செய்முறை

 • உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். 
 • கருப்பு கொண்டைக்கடலையை எட்டு மணிநேரம் ஊற வைத்து உப்பு வேக வைத்து கொள்ளவும்.
 • ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாகப் போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், மசாலா பொரி தயார். கல்கத்தாவில் விற்கும் மசாலா பொரி இதேபோல் தான் செய்வார்கள்.
 • மழைக்காலத்தில் சுடச்சுட டீயுடன் இந்த பொரியை செய்து சாப்பிடுவது கூட தனி சுகம் தான்.
 • குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.

Puffed rice is a type of puffed grain from the Indian subcontinent, made from rice, commonly used in breakfast cereal or snack foods, and served as a popular street food in India. This masala pori is equally addictive and is a breeze to make. It is a nice snack to have with a hot cup of tea in the evening occasionally or just as a snack to munch on when you are feeling hungry. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.