இனி வீட்டுலே சாக்லேட் செஞ்சிக்கலாம் – அவ்ளோ ஈசி!

பெரும்பாலான மலைவாசஸ் தலங்களில் ஹோம் மேட் சாக்லெட் விற்பனை செய்வார்கள். நாமும் விலை மலிவில் சாக்லேட் என்று வாங்கி வருவோம். சில நேரங்களில் சுகாதாரமாக செய்யாத சாக்லேட் குழந்தைகளுக்கு தொண்டை வலி, காய்ச்சல் வரும் என்பதால் செய்வதற்கு எளிதான ஹோம் மேட் சாக்லெட்டை வீட்டில் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தேவையான பொருள்கள்

 • மில்க் பவுடர் – 100 கிராம்
 • கொக்கோ பவுடர் – 100 கிராம்
 • சர்க்கரை – 75 கிராம் (ருசிக்கேற்ப)
 • வெண்ணெய் – 100 கிராம்

செய்முறை

 • மில்க் பவுடர் மற்றும் கோக்கோ பவுடரை கட்டியில்லாமல் நன்கு சலித்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சர்க்கரையில் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை மெல்லிய தீயில் வைத்துக் பாகு தயார் செய்யவும்.
 • சலித்து வைத்திருக்கும் கொக்கோ மற்றும் மில்க் பவுடர் கலவையை, இந்தப் பாகில் கொட்டிக் கிளறவும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே வரவும். அதில் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். 
 • பட்டர், சாக்லெட் கலவையோடு சேர்ந்து கண்ணாடிப் பதத்துக்கு உருகி வரும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
 • ஒரு  டிரேயில் அலுமினியம் ஃபாயில் பேப்பரை விரித்து, தயாரான சாக்லெட் கலவையை அதன் மீது ஊற்றி, டிரேயை ஃப்ரிசரில் வைக்கவும்.
 • நன்கு குளிர்ந்ததும் விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டால், ஹோம் மேட் சாக்லேட் ரெடி!
 • இதில் பொடியாக நறுக்கிய பொடித்த நிலக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரியும் சேர்கலாம்.

குறிப்பு

 • சர்க்கரைப் பாகு ஒரு கம்பிப் பதத்துக்கு மேல் இருந்தால் கெட்டியாகிவிடும், சாக்லேட்டை துண்டு போட முடியாது.
 • பவுடர்களை சரியாகச் சலிக்காவிட்டால், கலவையை கிளறும்போதே சாக்லேட் கட்டியாகிவிடும்.
 • வெண்ணையை விட்டுக் கிளறும் போது கண்ணாடிப் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிட வேண்டும். இல்லையெனில் கலவை இறுகி கடினமாகி விடும்.

During festivals like Diwali and Christmas, homemade chocolates make for excellent edible gifts. Wrap the chocolates in pretty colored papers and gift them to family, friends or your Valentine. You will surely be getting positive reviews and requests for more homemade chocolate. It’s great that you can make them ahead of time since they keep well at room temperature. It makes for a perfect sweet treat to indulge in any time of the day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.