அடுத்த வீட்டுக்கும் மணம் எட்டும் முருங்கை தீயல்!

இயற்கை வயாக்ராவான முருங்கையை விரும்பாதோர் உண்டோ? முருங்கைக் காய் சாம்பார் , கீரை பருப்பு கூட்டு , முருங்கை பூ முட்டை சேர்த்து பொரியல் , முருங்கை காய் சூப் , முருங்கை காய் சோறெடுத்து பருப்போடு கூட்டு என்று தம் கற்பனையோடு ருசி மிகுந்த ரெசிபிகள் தமிழகம் முழுவதும் உண்டு.

முருங்கைக் காயில் உள்ள இரும்புச் சத்து , கால்சியம் , பொட்டாசியம் அனைத்தும் இரத்த விருத்திக்கும் , எலும்புகளுக்கு வலுவும் , கூந்தல் வளர்ச்சிக்கும் , நரம்புகளை வலுவூட்டவும், விந்து உற்பத்திக்கு என்று ஒட்டுமொத்த உடல் உள்ளுறுப்புகளின் நலம் காக்கும் ஆபத்பாந்தவன்.

பிரத்யேக ருசியும் , வழக்கமான புளிக்குழம்பு போல இல்லாமல் மாறுதலான சுவைக்கு இந்த தீயலை செய்து பார்க்கலாம்.

Preparation time : 15 minutes

Cooking time : 30 minutes

Category. : Gravy / veg

தேவையான பொருட்கள் 

 • முருங்கைக் காய் -2 அல்லது 3
 • தக்காளி – 2
 • சின்ன வெங்காயம் – 100gm
 • பூண்டு. – 5 பல்
 • புளி
 • வெல்லம்
 • மஞ்சள் தூள்
 • உப்பு
 • நல்லெண்ணெய்

அரைக்க: 

 • தேங்காய் துருவல் – 1 கப்
 • மிளகு , சீரகம் , மல்லி , காய்ந்த மிளகாய்

தாளிக்க:

 • கடுகு , வெந்தயம் , காய்ந்த மிளகாய் , கருவேப்பிலை , கொத்தமல்லி இலை

செய்முறை 

1. முருங்கைக் காய்களை வெட்டி வைத்துக் கொள்ளவும்.சின்னவெங்காயம் , பூண்டை உரித்து கொள்ளவும்.இதன் ருசி பிடிக்கும் எனில் நிறைய சேர்த்து கொள்ளவும்.தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

2. மிளகு , சீரகம் , மல்லி , காய்ந்த மிளகாய் களை வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.

3 வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் தேங்காய் துருவல்களை சிவக்க வறுத்து எடுக்கவும்.

மேற்கண்ட கலவைகளை ஆறியவுடன் மையாக அரைத்து எடுக்கவும்.

4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் , நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிது , தக்காளி சேர்த்து வதக்கவும்.

5. சுருள வரும் போது உரித்த பூண்டு , வெங்காயம் , முருங்கைக் காய் போட்டு வதக்கவும் . இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

6 தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.அரை வேக்காடு வந்ததும் கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து விடவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.

7. காரம் பார்த்து தேவையெனில் மிளகாய் தூள் , மல்லித் தூள் சேர்த்து வேகவிடவும்.

எண்ணெய் விட்டு வரும் போது மீண்டும் ஒரு முறை தாளித்து கொள்ளவும்.நல்ல மணம் மிக்க தீயல் சூடான சாதத்துடன் அருமையான காம்பினேஷன்.பழைய தீயலும் சூடான கல்தோசையும் மீண்டும் மீண்டும் தோசை சாப்பிட வைக்கும்.

8. இதை சப்பாத்தியுடன், சாதத்துடன் ஊற்றி உண்ணலாம்.

மண்மணம் வீசும் ரெசிபிகள் என்றுமே மனதுக்கு பிடித்தமானது தானே!


Moringa which is grown excessively in India is one of the healthiest food source of iron & calcium nutrient. Eating moringa leaves, sticks, seeds, flowers are very useful for our body. Especially, it is useful to increase iron content (hemoglobin levels), breast milk production, after delivery weight loss, bone and knee pain strength, hair growth etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.