நலம் தரும் நிலக்கடலை குழம்பு (Groundnut Gravy Preparation & Benefits)

நிலக்கடலையை கொறித்துக்கொண்டே டிவி பார்க்கும் சுகம் வேறு ஸ்நாக்ஸில் கிடையாது. புளியோதரையில் புளிப்பும் , காரமும் ஊறிய கடலையின் ருசியும் அலாதி. மொறு மொறுப்பான பொரியில் வறுத்த கடலை படு ஜோரான காம்பினேஷன். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் பாக்கெட்டில் அடைப்பட்ட வறுகடலையை விட , பொரிவியாபாரி விற்பனை செய்யும் கடலையின் சுவை அருமை.

காதலர்கள் கடலை சாப்பிடாதீர்கள்

நூறு கிராம் நிலக்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரி அளவு உள்ளது. எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனம். மகப்பேறுக்கு காத்திருப்பவர்கள் கடலையை நிறைய சாப்பிடலாம் ஏனெனில் கர்ப்பபை செயல்பாடுகளை ஒழுங்கு படுத்தும் ஃபோலிக் அமிலம் கடலையில் உள்ளது. ஃபோலிக் அமிலம் (Folic Acid) இயற்கையிலே ஃபோலேட் ஆக உள்ளது. அந்த ஃபோலேட் (Folate) அதிகம் உள்ள பொருட்களில் கடலையும் ஒன்று. காதலர்களுக்கும் “கடலைக்கும்”, இப்படி ஒரு தொடர்பா? கடலைப்போடும் போது கடலையை நிலக்கடலையை காதலர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

நிலக்கடலையை பற்றிய தவறான விளம்பரம்

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.மக்கள் தொகை பெருக்கத்திலும் இரண்டு நாடுகளுக்கும் தான் போட்டாபோட்டி. நிலக்கடலையில் உடலுக்கு அதுவும் இதயத்திற்கு நன்மை செய்யும் கொலஸ்டிரால் உள்ளது. மருந்து உலகின் மிகப்பெரிய விற்பனை சந்தையான இந்தியாவில் இதயநோய் , மகப்பேறு பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால் அவர்கள் வியாபாரம் எப்படி களைகட்டும்.

கடலை எண்ணெயில் தோசை சுட்டு, நிலக்கடலை சட்னி வைத்து சாப்பிட்ட போது வராத இதயநோய்கள் இன்று நம்மை மருத்துவமனை வாசலில் காத்திருக்க வைக்கிறது. நம்மை கடலை சாப்பிடாதே என்று எச்சரிக்கை செய்த வெள்ளைக்காரன் சாக்லேட்டில் கடலை (Peanut) இருக்கு. அளவோடு உண்டால் எந்த உணவும் கெடுதல் இல்லை.

நிலக்கடலையைக் கொண்டு வித்தியாசமான சுவையில் ஒரு கிராமத்து ரெசிபியை கற்றுக் கொள்வோம்.

நலம் தரும் நிலக்கடலை குழம்பு

தேவையான பொருட்கள்

 • பச்சை வேர்க்கடலை – 100 கிராம்
 • சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
 • புளி – எலுமிச்சைப் பழ அளவு
 • உப்பு

தாளிக்க

 • கடுகு – தலா ஒரு டீஸ்பூன்
 • வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்
 • எண்ணெய் 4 டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் – 3
 • கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

நிலக்கடலை குழம்பு செய்முறை

 • பச்சை வேர்க்கடலையை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். அரைவேக்காடு வெந்ததும் எடுக்கவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து விடவும்.
 • சாம்பார் பொடி சேர்த்து சாம்பார் பொடி கருகாமல் கிளறவும்.
 • புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும்.
 • இதனுடன் வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து சில நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.
 • சுட்ட அப்பளம், தயிர் பச்சடி, சுடு சோறுடன் சிறந்த காம்பினேஷன்.

Groundnuts or peanuts are excessively rich in vitamins niacin, folate, pantothenic acid, thiamin, riboflavin, choline, Vitamin B6, Vitamin E and rich in minerals like magnesium, phosphorous, potassium, zinc, iron, copper, manganese and selenium. Also, good omega fats present in groundnut and groundnut oil is a healthy option to prevent and cure heart diseases. But many recent facts about groundnuts are misleading us by saying it will cause cholesterol, heart problems, high BP etc. Multi-nutrients rich in groundnut benefits for all ages if you consume it in limited quantity. Prepare groundnut recipes atleast once a week to stay healthy without heart diseases and other health issues.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.