உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி

குழந்தைகள் உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்
 • உருளைக்கிழங்கு – 2
 • பச்சைப் பட்டாணி – கால் கப்
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
 • வெங்காயம் – ஒன்று
 • பச்சை மிளகாய் – 2
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 • கடுகு – அரை டீஸ்பூன்
 • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 • உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துதோல் உரித்து பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • பச்சை பட்டாணியை நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
 • வெங்காயம், பச்சைமிளகாயை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • வாணலியை  அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • அடுத்து இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் நன்றாக வதக்கவும்.
 • பிறகு அதில் உதிரியாக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி கொண்டே இறக்கவும்.
 • அருமையான உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.