இறால் கறிவேப்பிலை மற்றும் தேன் சேர்த்து வறுவல்…

இன்று குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இறாலுடன் கறிவேப்பிலை, தேன் (honey) சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் .

  • இறால் – 100 கிராம்.
  • உப்பு – தேவையான அளவு.
  • வெள்ளை மிளகுத்தூள் – கால் t-spoon.
  • சர்க்கரை – கால் t-spoon.
  • வெண்ணெய் – 1 t-spoon.
  • எண்ணெய் – 1 டேபிள் spoon + தேவையான அளவு (பொரிக்க).
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி.
  • பூண்டு – 1 t-spoon (பொடியாக நறுக்கியது).
  • சில்லி பேஸ்ட் – 1 t-spoon.
  • தேன் – 1 t-spoon.
  • சோயா சாஸ் – அரை t-spoon.
  • கார்ன்ஃப்ளேக்ஸ் – 50 கிராம் (நொறுக்கியது).

பேட்டர் செய்ய:

  • கார்ன்ஃப்ளார் – 2 டேபிள் spoon.
  • மைதா – 1 டேபிள் spoon.
  • சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:

  • இறாலைக் நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதன் நடுவே நன்கு கீறி விடவும்,  ஆனால், இறாலை இரண்டாகப் பிளக்கக் கூடாது.
  • பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பேட்டர் செய்ய கொடுத்தவற்றை ஒரு cup-ல் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிப் நன்றாக பிசைந்து வைக்கவும்.
  • இறாலை ஒவ்வொரு peice-ஸாக எடுத்து பேட்டரில் புரட்டி எடுத்து நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் போட்டு புரட்டவும்.
  • இப்படி அனைத்து பீஸ்களையும் conflore-ல் புரட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டுக்கு வந்ததும் இறாலைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • மற்றொரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் தண்ணீர் ஊற்றி chilli peaste, உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், soya sauce ஊற்றி சாஸ் பதத்துக்குக் கொதித்ததும் அதில் பொரித்த இறாலைச் சேர்த்துப் புரட்டி தேன் ஊற்றிப் பரிமாறவும்.
  • இறாலை மட்டும் பொரித்தெடுத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து, மேலே தூவியும் சாப்பிடலாம்.
  • இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.